வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய மும்பை இன்டியன்ஸ் திலக் வர்மா!

0
180
Tilak Varma

ஐபிஎல் 16வது சீசனின் ஐந்தாவது போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது!

இந்த இரு அணிகளுக்கும் இடையே இந்த மைதானத்தில் நடந்த பத்து போட்டியில் எட்டு போட்டிகளில் மும்பையும், இரண்டு போட்டிகளில் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்தில் இருந்த மோசமான சாதனையை உடைத்தெறியும் விதமாக மிகச் சிறப்பான செயல்பாட்டை காட்டியது.

இஷாந்த் கிஷான் 10 ரன், ரோகித் சர்மா 1 ரன், கேமரூன் கிரீன் 5 ரன், சூரியகுமார் யாதவ் 15 ரன், டிம் டேவிட் 4 ரன் என ஒவ்வொருவரும் சீக்கிரத்தில் நடையைக்கட்ட மும்பை அணி மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கியது.

இப்படியான நெருக்கடியான சூழலில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா மிகவும் அதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிரடியாக விளையாடினாலும் கூட விக்கட்டை எந்த நேரத்திலும் விட்டு விடக்கூடாது என்பதிலும் மிக உறுதியாக செயல்பட்டார்.

- Advertisement -

மிக அபாரமாக விளையாடிய அவர் அரை சதத்தை கடந்தும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு வழி செய்தார். மொத்தம் 46 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் குவித்து அணியை 171 ரன்களுக்கு கொண்டு வந்தார்.

இதில் ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் மகேந்திர சிங் தோனி ஸ்பெஷல் ஆக விளையாடும் ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடி சிக்ஸர் அடித்து அணி 170 ரன்கள் கடக்க வைத்தார். பந்து நன்றாக கால்களுக்கு இடையே உள்ள வந்த பொழுதும், அதை கொஞ்சம் நொடியில் உணர்ந்து அதற்கேற்றார் போல் ஹெலிகாப்டர் ஷாட் முறையில் விளையாடிய அவர் சிக்ஸர் அடித்தது மட்டுமில்லாமல், இன்னிங்ஸை கட்டமைத்து விளையாடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது!