வீடியோ.. குட்டி அக்தர்.. ஆள் மட்டுமல்ல பவுலிங் ஆக்சனும் அதே மாதிரி.. ஆச்சரியப்படுத்தும் ஓமன் வீரர்!

0
872
Akthar

உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாடு வேகப்பந்துவீச்சாளர்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை போல் இதுவரை இயங்கி வந்திருக்கிறது.

இப்பொழுது கூட ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மற்றும் நஷீம் ஷா என மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி பாகிஸ்தான் அணியிடம் இருக்கிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாறாத ஒன்றாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.

- Advertisement -

வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், இம்ரான் கான் என வளர்ந்த வேகப்பந்து வீச்சு பாரம்பரியம் நடுவில் கிரிக்கெட் உலகத்திற்கு எக்கச்சக்க வேகப்பந்துவீச்சாளர்களை கொடுத்திருக்கிறது.

வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் காலத்தில், 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வேகப்பந்துவீச்சாளரான ஒரு இளைஞர் வந்தார். அவர்தான் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர்.

ஆரம்ப கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் வேகம் இருந்தால் போதும், துல்லியம் பெரிய அளவில் தேவையில்லை என்கின்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. இயல்பான தீ மாதிரியான வேகத்தை எதிர்பார்த்து, மைதானத்திற்கு வரக்கூடிய ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படியான ரசிகர்களுக்கு தேவை வேகம் மட்டுமே. அதில் எந்தக் குறையும் வைக்காத வீரராக மிக அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் பந்து வீசினார் சோயிப் அக்தர். பவுண்டரி எல்லைக்கு பக்கத்தில் இருந்து பந்து வீச அவர் ஓடி வருவதே, கழுகு இரைக்காக பறந்து வருவது போல இருக்கும். அவரது நீண்ட தலை முடி, அவரது நீண்ட ஓட்டம், அவரது அசாத்திய வேகம் கவர்ச்சிகரமான ஒரு பந்துவீச்சாளராக கிரிக்கெட்டில் அவரை நிலை நிறுத்தி இருந்தது.

தற்பொழுது அச்சு அசலாக சோயிப் அக்தரை போலவே ஓமன் நாட்டைச் சேர்ந்த 26 வயதான வலதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமத் இம்ரான் இருக்கிறார். ஆள் உருவத்தில் மட்டும் அக்தர் போல் இல்லாமல், பந்து வீசுவதும் அவரைப்போலவே இருக்கிறது.

தற்பொழுது முகமத் இம்ரான் பந்து வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் அக்தரை குறிப்பிட்டு வெகு வேகமாக வைரல் ஆகி வருகிறது. வீடியோவில் பார்ப்பதற்கு அக்தர் பந்து வீச திரும்பி வந்திருப்பது போலவே இருக்கிறது என்பதுதான் இதில் சுவாரசியமான விஷயம்!