வீடியோ இணைப்பு ; விராட் உங்க டைம் முடிஞ்சது? – விராட் கோலி சொன்ன மாஸ் பதில்!

0
919
Viratkohli

தற்போதைய உலக கிரிக்கெட்டில் அதிக மதிப்பு வாய்ந்த வீரர் விராட் கோலிதான். அவர் இன்ஸ்டாகிராமில் வருடத்திற்கு சம்பாதிக்கும் தொகை மட்டுமே 300 கோடிக்கும் மேல். உலக அளவில் விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இவர் மூன்றாமிடத்தில் இருக்கிறார்!

இவரது இவ்வளவு மதிப்பிற்கான காரணம் முப்பத்தி மூன்று வயதில் 527 இன்னிங்ஸ்களில் இருபத்தி நான்காயிரம் ரன்களுக்கு மேல் குவித்தது மட்டும் கிடையாது.

- Advertisement -

இவருக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் அளவற்ற காதலும், கிரிக்கெட்டுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும், கிரிக்கெட்காக களத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இவர் கொட்டும் உழைப்பும்தான் இவரது புகழுக்கான மதிப்பிற்கான காரணம்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், “நான் ஒரு விளையாட்டு வீரன் என் உடம்பு சற்று பருத்து இருக்கக்கூடாது. நான் என் உடற் தகுதியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஒரு தடகள வீரன் போல் இருக்க வேண்டும் ” என்று விராட் கோலி ஆரம்பத்திலேயே முடிவுசெய்து, உடற்தகுதிக்காக நிறைய உழைப்பை கொட்டியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை தற்போது வரை கூட உண்பது கிடையாது.

கிரிக்கெட் என்று வரும்பொழுது விராட் கோலி அடிமைபோல் உழைக்கக் கூடியவர். அதனால்தான் அவர் கிரிக்கெட்டில் அரசனாகவும் இருக்கிறார். இதற்கு ஒரு உதாரணமாக நேற்று விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும்பொழுது, அவருடைய பயிற்சி நேரம் முடிந்து விட்டது என்று அணி ஊழியர்கள் அவரிடம் கூறுகிறார்கள். அதற்கு விராட் கோலி ” தீபக் ஹூடா பயிற்சிக்குத் தயாராகி வரட்டும். நான் அதுவரை பயிற்சி செய்கிறேன். அவர் வந்தவுடன் கிளம்புகிறேன் ” என்று கூறிவிட்டு அடுத்த பந்தை விளையாடுகிறார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -