வீடியோ; 6, 4, 2, 6… திட்டம் போட்டது இருக்கட்டும் பந்தை போடுங்க ; சிக்ஸர்களுக்கு பறக்க விட்ட தல தோனி; கொண்டாடிய குடும்பம்!

0
1736
Dhoni

இன்று பிளே ஆப் சுற்றுக்கான முக்கிய போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது !

இந்த போட்டிக்கான டாஸில் பண்ற மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் 24, மற்றும் கான்வே 10 ரன் என வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து வந்த ரகானே 21, மொயின் 7, சிவம் துபே 25, அம்பதி ராயுடு 23, ரவீந்திர ஜடேஜா 21 ரன்களில் வெளியேறினார்கள். தீபக் சகர் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். துஷார் தேஷ் பாண்டே ஆட்டம் இழக்காமல் ரன் எடுக்காமல் இருந்தார்.

இதற்கு நடுவில் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வழக்கமான ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் தனது குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்தினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை கலீல் வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்சர், அடுத்து ஒரு பவுண்டரி, அடுத்து இரண்டு ரன், அடுத்து சிக்ஸர் என அசத்தினார். இந்த ஓவரில் அவர் எடுத்த 20 ரன்கள்தான் சென்னை அணி இந்த ஆடுகளத்தில் வெற்றி பெறுவதற்கான ஒரு வித்தியாசத்தை கொடுத்தது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முழுக்க மகேந்திர சிங் தோனியின் பேட் ஸ்பீடு மிகவும் பிரமாதமாக இருந்து வருகிறது. லக்னோ அணிக்கு எதிராக சென்னையில் விளையாடிய போட்டியில் அதிவேக மார்க் வுட் பந்தை அவர் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களுக்கு அனுப்பியதே சாட்சி.

இன்றைய போட்டியில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆப்ஸ் வாய்ப்புக்குள் ஒரு காலை அழுத்தமாக வைக்கும். டெல்லி வென்றால் பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்காமல் இருக்கும்.