வீடியோ.. லாரா கூப்பர் கண்ணீர்.. ஆஸியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி.. உருக்கமான நிகழ்வுகள்

0
550
Lara

1970-80களில் உலக கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்சி செய்து கொண்டிருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என பல ஜாம்பவான்கள் இடம் பெற்று இருந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது.

ஆப்பிரிக்காவின் நிலவியலின் காரணமாக வலிமையான தடகள உடல் அமைப்பை பெற்று இருந்த உயரமான வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் ஒருபுறம் வந்து பந்துவீச்சில் உலக கிரிக்கெட் நாடுகளை மிரட்டி கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் ரிச்சர்ட்ஸ் மற்றும் லாரா போன்ற வலிமையான பேட்ஸ்மேன்கள் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகெங்கும் பல வெற்றிகளை குவித்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் 90களில் சரியா ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தற்பொழுது டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களுக்கு தகுதி பெற முடியாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் லாராவுடன் விளையாடிய மற்றும் ஒரு லெஜன்ட் கார்ல் கூப்பர் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் குழுவில் இருக்கிறார். அவர் இது குறித்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத போது கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த காயங்களுக்கு மருந்திடும் வகையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது.

இந்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் தரப்பு மிகவும் உணர்வுபையப்பட்டு காணப்படுகிறது.

இதையும் படிங்க : “உண்மையில ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. வெஸ்ட் இண்டீஸ் வேற ஐடியா வச்சிருந்திருக்காங்க” – கம்மின்ஸ் பேச்சு

கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்த லெஜெண்ட் லாரா கண்ணீர் வர இந்த வெற்றியை கொண்டாடினார். இன்னொரு பக்கம் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சிக் குழுவில் இருக்கும் லெஜன்ட் கார்ல் கூப்பர் தொலைக்காட்சியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற பொழுது கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுதார். இந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது கிரிக்கெட்டில் எவ்வளவு உணர்வுபூர்வமாக ரசிகர்களிடமும் வீரர்களிடமும் இறுகி இருக்கிறது என்பது தெரிகிறது.