“உண்மையில ரொம்ப ஏமாற்றமா இருக்கு.. வெஸ்ட் இண்டீஸ் வேற ஐடியா வச்சிருந்திருக்காங்க” – கம்மின்ஸ் பேச்சு

0
301
Cummins

ஆஸ்திரேலியா அணி கடந்த 39 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் இந்திய அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. தற்பொழுது இந்திய அணி இருந்த இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் சேர்ந்து இருக்கிறது.

27 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் தனது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். மேலும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எந்த அணிகளும் வீழ்த்தியதில்லை என்கின்ற வரலாற்றை வெஸ்ட் இண்டீஸ் மாற்றி அமைத்து இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கு வரும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி ஒரு வெற்றியை ஈட்டும் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடிய இளம் வீரர்கள் இவ்வளவு போராட்ட குணத்தை வெளிப்படுத்தவார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் எடுக்க, அடுத்து ஆஸ்திரேலியா 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதற்கு அடுத்து தொடர்ச்சியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

216 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா இறுதியில் 27 ரன்கள் மட்டும் எடுத்து 8 தங்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதிவரை களத்தில் நின்ற ஸ்மித் போராடி 90 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ள இந்த வெற்றி அவர்களது தேய்ந்திருக்கும் கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர உதவும்.

- Advertisement -

தோல்விக்குப்பின் பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது “உண்மையில் இந்த தோல்வி ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் இது மொத்தத்தில் ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. இன்று பந்துவீச்சில் ஷாமர் மிகச் சிறப்பாக இருந்தார். நாங்கள் போதுமான அளவில் இல்லை.

216 என்கின்ற இலக்கை துரத்த முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஏனென்றால் நேற்று நாங்கள் இந்த துரத்தலில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வித்தியாசமான ஐடியாக்களை வைத்திருந்தது. நாங்கள் கடைசியில் இந்த இலக்கை கடக்க தவறிவிட்டோம்.

ஸ்மித் விளையாடுவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் பதினைந்து வருடங்களாக ஆஸ்திரேலிய அணிக்கு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் முடிந்த வரையில் அணியை இழுத்து வந்தார்.

இதையும் படிங்க! “ஆஸி வீரர் சொன்ன இந்த மோசமான வார்த்தைதான் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு காரணம்” – கேப்டன் பிராத்வயிட் பேச்சு

இந்த விளையாட்டை புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நீங்கள் உலகத்தின் உச்சமான அணியாக இருந்தாலும் கூட ஒருநாள் தோற்கடிக்கப்படுவீர்கள். மீண்டும் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிப்பீர்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அற்புதமாக இருந்தார்கள் இந்த வாரம் அவர்கள் எங்களை மிஞ்சினார்கள். எப்பொழுதும் பாடங்களை நாம் கடினமான வழிகளில் இருந்தே கற்றுக் கொள்கிறோம். அடுத்து நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாட செல்வதற்கு முன்னால் எங்களுக்கு ஒரு மாத காலம் ஓய்வு இருக்கிறது. எந்த ஒரு வெளிநாட்டு பயணமும் கடினமாக இருக்கும் ஆனால் நான் அதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.