வீடியோ.. வித்தியாசமாக புகார் சொன்ன லபுசேன்.. கலாய்த்து தள்ளிய அஜய் ஜடேஜா..என்ன நடந்தது?

0
1846
Labuschagne

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அபாரமான முறையில் ஆப்கானிஸ்தான் அணி மும்பையில் செயல்பட்டு வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி தைரியமாக முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்து, ஐந்து விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 143 பந்துகளில் 129 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசிக்கட்டத்தில் ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஆப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்ஸாய் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.

டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரையும் நவீன் வெளியேற்றினார். இதற்கு அடுத்து ஓமர்ஸாய் டேவிட் வார்னரையும் இங்லீஷையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பெரிய நெருக்கடியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து சிக்கிக்கொண்டது. இன்னொரு பக்கத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேவையில்லாமல் பேசுகிறார்கள் என்று ஆஸ்திரேலியா தரப்பில் நடுவரிடம் புகார் வைக்கப்பட்டது.

இதற்கு அடுத்து களத்திற்குள் வந்த லபுசேன் உச்சகட்டமாக ஆப்கானிஸ்தான் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பவர்கள் நடப்பது தனக்கு பிரச்சனையாக இருக்கிறது என்று புகார் செய்ய ஆரம்பித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைவரும் நகராமல் அமர்ந்தார்கள்.

இந்த நிலையில் லபுசேன் தேவையில்லாமல் இப்படியான புகார் சொல்கின்ற காரணத்தினால், ஆப்கானிஸ்தான் அணியின் மென்டராக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஆப்கானிஸ்தான் டிரஸ்ஸிங் ரூமில் நடனமாடி ஆஸ்திரேலியாவை கலாய்த்தார். இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது!