வீடியோ; சாரே கொல மாஸ்.. தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்த குசால் மென்டிஸ்.. லங்கா பிரிமீயர் லீக்கில் அட்டகாசம்!

0
434

தற்போது இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தம்புல்லா அவுரா மற்றும் காலே டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தம்புல்லாணியின் கேப்டன் கு ஷால் மெண்டிஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியை போன்று ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆனால் எம்எஸ் தோனி சிறந்த ஃபினிஷர் ஆக மட்டும் இல்லாமல் சிறந்து விக்கெட் கீப்பராகவும் வழங்கியவர். மின்னல் வேக ஸ்டெம்பிங் மற்றும் ரன் அவுட்க்கு பேர் போனவர். இன்றைய இளம் தலைமுறை விக்கெட் கீப்பர்களுக்கு ரோல் மாடல் அவர்தான்

- Advertisement -

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்வதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளம் தலைமுறை விக்கெட் கீப்பர்களும் தோனியின் கிரிக்கெட் கீப்பிங் ட்ரிக்சை பாலோ செய்து வருகின்றனர். குறிப்பாக நியூசிலாந்து அணியின் 2016 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது தோனி செய்த ஒரு ரன் அவுட் ரசிகர்களிடம் பிரபலமானது.

2016 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் இங்கிலாந்து அணியின் வீரர் ரோஸ் டைலரை முகமது அசாருதீன் ஸ்டைலில் ஸ்டெம்பை பார்க்காமலே பின்பக்கமாக த்ரோ செய்து ரன் அவுட் செய்திருந்தார் தோனி

தற்போது இதே போன்றதோடு ரன் அட்டை தம்புலா மற்றும் காலே அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது செய்து ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறார் குஷால் மெண்டிஸ் . இந்த போட்டியின் போது காலே அணியின் வீரர் சமரகூன் என்பவரை மகேந்திர சிங் தோனியை போன்றே ரன்அவுட் செய்து ஆட்டம் இழக்க செய்தார். இது தற்போது வைரலாகி இருக்கிறது..

- Advertisement -

நேற்றைய போட்டியின் இறுதி ஓவரில் இரண்டு ரன் ஓட முயன்ற போது ஸ்டம்பிலிருந்து தூரமாக வந்த வந்து பிடித்து கிரிக்கெட்டை பார்க்காமலே பின்புறமாக தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் குஷால் மெண்டிஸ். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

எம் எஸ் தோனி இதுபோன்று பல ரன் அவுட்டுக்களை செய்து இருந்தாலும் அவரைப் போன்றே மற்ற வீரர்களும் செய்வது சமூக வலைதளங்களில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது . அதேபோன்றுதான் தற்போது இந்த ரன் அவுட் வைரலாகி இருக்கிறது. அதற்கான வீடியோவை இங்கு கண்டு களியுங்கள் .