வீடியோ… பவுண்டரியுடன் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்த ஜெய்ஸ்வால்; இந்தியா அபாரம்!

0
6593
Jaiswal

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடுகிறது!

இந்தத் தொடரில் முதலில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று டொமனிக்காவில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

எதிர்பார்த்தது போலவே வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பெரிய அளவில் எந்தவித போராட்டமும் இல்லை. அவர்கள் மிக எளிதாக இந்திய பந்துவீச்சு படையின் முன்னால் சரணடைந்தார்கள். எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தப் போட்டியில் அறிமுகமான ஆத்தனஸ் மட்டுமே தாக்கு பிடித்து 47 ரன்கள் எடுத்தார். முடிவில் 150 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் அவர் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்கம் தர இந்த முறை இந்திய கேப்டன் ரோகித் சர்மா உடன் இந்திய டெஸ்ட் அறிமுக இடதுகை வீரர் ஜெய்ஸ்வால் களம் இறங்கினார். தமது முதல் ரன்னை எடுக்க அவருக்கு 16 பந்துகள் தேவைப்பட்டது.

- Advertisement -

பதினாறாவது பந்தில், அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் கொஞ்சம் வெளியில் வீசப்பட்ட பந்தை, டீப் பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்து, தமது முதல் சர்வதேச ரன்னை எடுத்தார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பவுண்டரியுடன் ஆரம்பித்து இருக்கிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களை பெரிதாக எதுவும் சிரமப்படுத்த முடியவில்லை. விக்கெட்டில் நல்ல பவுன்ஸ் இருக்கிறது பந்து நன்றாக திரும்புகிறது. ஆனால் இதை இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியது போல அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 80 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 40 ரன்கள் எடுத்து தற்பொழுது களத்தில் நிற்கிறார். கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் பெரிய கோர் அடித்தால் இரண்டாவது முறை பேட்டிங் செய்ய தேவை இருக்காத நிலைதான் தற்பொழுது நிலவுகிறது.