வீடியோ.. எடுத்தேன் பாரு ஓட்டம்.. நொடிப் பொழுதில் பாம்பிடம் இருந்து தப்பித்த இஸ்ரு உதானா.. லங்கா பிரீமியர் லீகில் பரபரப்பு.!

0
497

உலகெங்கிலும் நடத்தப்பட்டு வரும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளைப் போலவே இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடும் இந்தப் போட்டி தொடரானது நான்காவது முறையாக தற்போது நடைபெற்று வருகிறது .

இந்தப் போட்டி தொடரில் கடந்த முறை ஜாப்னா கிங்ஸ் அணி பட்டம் வென்றது. தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் ஷகீப் அல் ஹசன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டி தொடரானது ஜூலை 30ஆம் தேதி துவங்கியது. வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டி தொடரில் 10 புள்ளிகள் உடன் தம்புலா அவுரா அணி முதலிடத்திலும் 8 புள்ளிகளை பெற்றிருக்கும் பி லவ் கண்டி அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடப்புச் சாம்பியன் ஆன ஜாப்னா கிங்ஸ் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. லீக் போட்டிகளில் இன்னும் மூன்று போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில் முதல் நான்கு இடங்களுக்காக கடும் போட்டி நிலவி வருகிறது.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பாம்பு மைதானத்திற்குள் புகுந்து அடிக்கடி தொந்தரவு ஏற்படுத்தி வருகிறது . கடந்த முறை தம்புல்லா அவுரா மற்றும் காலே டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது விஷப்பாம்பு ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது . இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது .

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான இஸ்ரூ உதனா மைதானத்திற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது . நேற்று கொழும்பில் நடைபெற்ற போட்டியின் போது தான் இந்த பரபரப்பான சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

கொழும்புவில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு பீ லவ் கண்டி மற்றும் ஜாப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பி லவ் கண்டி அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தனர் . 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நடப்புச் சாம்பியன் ஜாப்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்களில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியின் போது பவுண்டரி லைன் அருகே பில்டிங் செய்து கொண்டிருந்தார் இலங்கையின் முன்னாள் ஆல்ரவுண்டரான இஸ்ரு உதானா. அப்போது மைதானத்திற்குள் புகுந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடிப்பதற்காக சென்றிருக்கிறது. அந்தப் பாம்பிடம் இருந்து கண்ணிமைக்கும் நொடி பொழுதில் தப்பித்தார் உதானா. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கிரிக்கெட் மைதானத்திற்குள் அடிக்கடி பாம்புகள் புகுந்து வீரர்களை அச்சுறுத்துவது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பான வீடியோ காட்சி இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.