வீடியோ.. இவ்ளோ நல்லவரா?.. இந்திய அணிக்கு எதிராக 58 ரன் எடுத்த வீரரின் வைரலாகும் ஸ்பிரிட் ஆப் த கேம்!

0
508
Nepal

நேற்று ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நேபாள் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப்போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி ஆரம்பகட்ட பேட்டிங் மிகச் சிறப்பான எதிர் தாக்குதலாக அமைந்திருந்தது!

இந்திய அணி வீரர்கள் ஆரம்பத்தில் நேபாள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கொடுத்த எளிதான மூன்று கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தார்கள் என்பது உண்மை.

- Advertisement -

அதே சமயத்தில் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்புகளை நேபாள் துவக்க ஆட்டக்காரர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று பார்த்தால் அது மிகச் சிறப்பாக இருந்தது.

நேபாள் அணியின் துவக்க ஆட்டக்காரர் குஷால் புர்டேல் அதிரடியான எதிர் தாக்குதல் நடத்தி 25 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 38 ரன்கள் அடித்தார். இவர் பவர் பிளவில் ஒரு பந்து மீதம் இருக்க ஆட்டம் இழந்தார்.

இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் ஆரம்பத்தில் கொஞ்சம் அதிரடி காட்டினாலும் பின்பு விக்கெட்டுகள் விழ நிதானம் காட்டி சிறப்பாக விளையாடிய 97 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டுக்கு எதிராக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இப்படியான அரை சதம் நேபாள் அணிக்கு இது இரண்டாவது. முதல் அரைசதத்தை இவரது தம்பி அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இந்த ஆசிப் ஷேக் சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் காட்டிய நேர்மைக்கு வீடியோ வைரல் ஆகிறது. மேலும் இந்த செயலுக்காக அவர் அப்பொழுது ஐசிசி யின் ஸ்பிரிட் ஆப் தி கேம் அவார்ட் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு ஓமனில் நடைபெற்ற டி20 தொடரில், நேபாள் அயர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. அப்பொழுது போட்டியின் 18-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்க் அடேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்து அது முடியாமல் போக ஒரு ரன்னுக்கு ஓடினார். ஆனால் மறுபுறம் இருந்த அயர்லாந்து வீரர் மேக்ப்ரையன் நேபாள பந்துவீச்சாளர் உடன் இடித்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் விக்கெட் கீப்பரான ஆஷிப் ஷேக் இடம் பந்து த்ரோ செய்யப்பட்டது. ஆனால் பந்தை பிடித்த ஆசிப் ஷேக் பைல்சை தட்டி ரன் அவுட் செய்ய விரும்பவில்லை. காரணம் பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் உடன் இடித்துக் கொண்டதால், அவுட் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து உடனுக்குடன் பந்தை அப்படியே அணியின் மற்ற பீல்டருக்கு த்ரோ செய்துவிட்டார்.

அவரது இந்த நேர்மையான செயல்பாட்டுக்காக அப்பொழுது ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் அவார்ட் அவருக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக அவர் 58 ரன்கள் எடுக்க இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளத்தில் சுற்ற ஆரம்பித்து வைரல் ஆகி கொண்டு இருக்கிறது!