வீடியோ.. “இந்திய பிரபல வீரர் மைதானத்தில் பேசினார்.. ஆனால்..!” – லபுசேன் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
9202
Labuschagne

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களில் ஒருவர் லபுசேன். டெஸ்ட் போட்டிகளில் நட்சத்திர வீரராக விளங்கும் லபுசேன் படிபடியாக, ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட தொடங்கினார் .

இந்தியாவில் நடந்த 50 ஓவர் ஒருநாள் உலககோப்பை ஆஸ்திரேலியஅணியின் வீரர்கள் பட்டியலில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஆஷ்டன் ஆகர் காயம் காரணமாக வெளியேற கடைசி நேரத்தில் அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

இதனால் இந்தியா போன்ற சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஆஸ்டன் ஆகருக்கு பதிலாக லபுசேன் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் லபுசேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்தத் தொடரில் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களின் மோசமான பார்மினால் இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா இழந்தது. இதன் காரணமாக மறுபுறம் லபுசேன் சேர்க்கப்பட்டது ஆறுதலான விஷயமாகவும் பார்க்கப்பட்டது.

50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்கள் ஆஸ்திரேலிய அணி பெரிய தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியல் கடைசி இடத்தில் இருந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீது மிகப்பெரிய விமர்சனம் வைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மூன்றாவது அணியாக அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையும் வென்று அசத்தியது.

- Advertisement -

லீக் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத லபுசேன் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 47/3 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தத்தளித்த போது, தனது டெஸ்ட் பாணியிலான ஆட்டத்தை முன்னெடுத்து அபாயகரமான இந்திய பந்துவீச்சுக்கு எதிராக பொறுமையாக ஆடி ஆட்டமிழக்காமல் களத்தில் கடைசி வரை நின்றார்.

இவர் ட்ராவிஸ் ஹெட் உடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

போட்டி குறித்து லபுசேன் கூறும்பொழுது “மை வேர்ல்ட் கப் வ்ராப்” என்ற செய்திக் குறிப்பில் குறிப்பிட்டதாவது “மைதானத்தில் அதிக அளவு சத்தம் காரணம் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தார்கள். பிரபல இந்திய அணி வீரர் எங்களிடம் ஏதோ சொல்லுகிறார் ஆனால் என்னால் அவருக்கு பதில் அளிக்க இயலவில்லை அந்த அளவுக்கு சத்தம் அதிகமாக இருந்தது மைதானத்தில்”என்றார்.

லபுசேன் பிரபல வீரர் என்று சொல்வது விராட் கோலியைத்தான் என்பதாக புரிகிறது. அதற்கான வீடியோவும் சமூக வலைதளங்களில் வந்திருக்கின்றன. அதே சமயத்தில் விராட் கோலி விளையாடும்போது அவரிடம் பேச வேண்டும் என்பதற்காக இறுதிப்போட்டியின் போது நல்ல விதமாக எல்லோரும் பேசி அவரது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!