வீடியோ ; அவன் உனக்கு இப்படித்தான் பந்துவீச போறான் – தினேஷ் கார்த்திக்கை எச்சரித்த சூரியகுமார்!

0
12636
DK

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வர, அதே சமயத்தில் இந்த உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற எட்டு அணிகளுக்கான பயிற்சி போட்டிகளும் நடந்து வருகிறது!

இன்று ஒரு பயிற்சி ஆட்டத்தில் பிரிஸ்பன் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப்போட்டியில் வார்னர் மற்றும் ஹேசில் உட் விளையாடவில்லை. இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் ரிஷப் பண்ட் விளையாடவில்லை.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இன்னொரு முனையில் சராசரி பங்களிப்போடு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் சீக்கிரத்தில் வெளியேறினார்.

இவருக்குப் பிறகு 13.4 ஆவது ஓவரில் சூரியகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்து தினேஷ் கார்த்திக் அடுத்த 18 பந்துகளில் 27 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் 14 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல இந்த ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு பிறகு வந்தவர்களில் பேட்ஸ்மேன்கள் யாரும் கிடையாது.

இந்தநிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பந்தை ரிச்சர்ட்சன் வீசுவதற்கு முன்னால், சூரியகுமார் யாதவ் தினேஷ் கார்த்திக் இடம் ” அவன் இப்ப பாயிண்டுக்கு பின்னால் அடிக்கிற மாதிரி போடப் போறான் அப்படின்னு நினைக்கிறேன் ” அப்படின்னு சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த சமயத்தில் ஆப் சைடு பாயிண்ட் திசையில் தூரத்திலிருந்த பீல்டர் உள்ளே கொண்டு வரப்பட்டார். உள்வட்டத்தில் லெக் சைடு மிட் விக்கெட் திசையில் நின்ற பீல்டர் அதே திசையில் வெளி வட்டத்தில் நிற்க வைக்கப்பட்டார். அப்போது வீசப்பட்ட பந்தை தினேஷ் கார்த்திக் தூக்கி டீப் மிட்விக்கெட்டில் அடிக்க அந்தப் பந்து மேக்ஸ்வெல் கையில் கேட்ச் ஆக மாறியது.

இன்றைய போட்டியில் சூரியகுமார் கடைசி நேரத்தில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறி ஒரு பவுண்டரி மூலம் அரைசதம் அடித்து, ரன் அடிக்கும் மூடே போய்விட்டது என்று கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சமூக வலைத்தளத்தில் பரவி கேட்பதற்கு சுவராசியமாக இருந்தது. தற்பொழுது சூரியகுமார் பேசிய இன்னொன்று வெளியாகியிருக்கிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -