வீடியோ; பரிதாபமாய் வெளியேறிய ஸ்ரேயாஷ் ஐயர் ; ஹேன்ட்ஸ்கோம் அபார கேட்ச்!

0
538
Sherayas

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியின் முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது!

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதற்கு அடுத்து நேற்று விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 21 ரன்கள் எடுத்திருந்த பொழுது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஆரம்பத்தில் தாக்குப்பிடித்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நாதன் லயன் வந்த பிறகு வெளியேறினார்கள்.

அத்தோடு இந்திய அணியின் சரிவு நிற்காமல் புஜாரா, ஸ்ரேயாஷ் என்று தொடர்ந்தது. இதில் ஸ்ரேயாஷ் விக்கட்டை அருகில் நின்றிருந்த ஹேன்ட்ஸ்கோம் மார்பில் வாங்கி கீழே விழுந்து, உருண்டு பிடித்து வீழ்த்தினார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

தற்பொழுது இந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது!

- Advertisement -