வீடியோ.. கையெழுத்து போட்டு டிஷர்ட்டை பாபருக்கு கொடுத்த கோலி.. களத்தில் நெகிழ்வான காரியம்!

0
982
Virat

உலகின் பல கிரிக்கெட் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இன்று நடைபெற்று முடிவு வந்திருக்கிறது!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி மிக எளிமையாக 30.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

போட்டி நடைபெற்ற குஜராத் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருந்தது. பாகிஸ்தான அணியும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஓரளவுக்கு சமாளித்து 30 ஓவர்கள் வரையில் நன்றாகவே வந்தது.

ஆனால் இதற்கு அடுத்து முகமது சிராஜ் பும்ரா, குல்தீப் யாதவ் மூவரும் சேர்ந்து தங்களது சிறப்பான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணியை மொத்தமாக சரித்து 191 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து விட்டார்கள்.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 36 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து 86 ரன்கள் எடுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை களத்தில் நின்று உலகக் கோப்பையில் தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்து அணியை வெல்ல வைத்தார்.

- Advertisement -

இந்தப் போட்டி எப்படியும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், போட்டி மீண்டும் ஒருதலைப் பட்சமாக முடிந்திருக்கிறது.

தொடர்ந்து எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெல்கிறது. பாகிஸ்தான அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியை வெல்லாத மோசமான வரலாறு தொடர்கிறது.

இந்த நிலையில் போட்டி முடிந்ததற்கு பின்னால் விராட் கோலி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு தன் கையெழுத்து போட்ட டி-ஷர்ட்டை நட்பின் அடையாளமாக அவருக்கு வழங்கினார். போட்டி குறித்தும், இரு நாடுகள் குறித்தும் எழுந்த எல்லாவிதமான சூட்டையும் தணிக்கும் விதமான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பாக சிறப்பாக இது அமைந்தது. இது களத்தில் மிகவும் அருமையான காட்சியாக இருந்தது!