வீடியோ; கைகுலுக்காமல் சென்ற கங்குலி-விராட் கோலி ; ஐபிஎல் வரை தொடரும் உரசல்!

0
1841
Virat kothi

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று மோதிக்கொண்ட போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி 33 பந்துகளில் அரை சதம் அடித்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதி பந்துவீச்சின் போது மூன்று கேட்சுகள் பிடித்து அணி வெல்ல உதவியாகவும் இருந்தார். இந்த இரண்டு பங்களிப்புகளின் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கவும் பட்டார்.

ஆட்டம் முடிந்து செல்கையில் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வில் விராட் கோலி ரிக்கி பாண்டிங் உடன் கைகுலுக்கி இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகையில், ரிக்கி பாண்டிங் பின்னால் வந்த கங்குலி விராட் கோலி உடன் கைகுலுக்க காத்திருக்காமல் இவர்களை உடனே தாண்டி சென்று விட்டார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விராட் கோலி ஃபீல்டிங் செய்கையில் கேட்ச் பிடித்து கங்குலியை நோக்கி ஆக்ரோஷமாக பார்த்தது போல் ஒரு புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ள கங்குலி பின்னிருந்து அழுத்தம் கொடுத்தவராக இருந்தார் என்ற கருத்து பரவலாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டிங் ஆபரேஷன் போது அப்போதைய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

தற்பொழுது இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உரசல் ஐபிஎல் வரை தொடர்ந்து வருகிறது. விராட் கோலியின் ரசிகர்கள் தற்பொழுது இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள்!