வீடியோ.. களத்தில் மோதிக்கொண்ட கம்பீர் ஸ்ரீஷாந்த்.. குடும்பம் வரை பாதிப்பு.. கடுமையான புகார்!

0
411
Gambhir

தற்போது இந்தியாவில் ஓய்வு பெற்ற மூத்தவீரர்கள் லெஜெண்ட்ஸ் லீக் டி20 தொடரில் விளையாடுகிறார்கள். இந்த தொடரில் தற்பொழுது நாக் அவுட் சுற்று நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் கம்பீர் தலைமை தாங்கும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரீசாந்த் இடம் பெற்று இருக்கும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த கம்பீர் அணி அவருடைய சிறப்பான அதிரடி அரை சதத்தின் காரணமாக ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது.

இதற்கடுத்து களம் இறங்கிய குஜராத் அணிக்கு கெயில் அதிரடியாக 81 ரன்கள் எடுத்தாலும், இறுதியாக அந்த அணியால் 211 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது. எனவே கம்பீரின் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது களத்தில் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் மோதிக்கொண்டார்கள். அப்போது கம்பீர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீஷா நேற்று தொலைக்காட்சியில் பேசும்பொழுது “கம்பீருடன் என்ன நடந்தது என்பது குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த காரணமும் இல்லாமல் ஷேவாக் பாய் உட்பட எந்த மூத்த வீரர்களையும் அவர் மதிக்கவில்லை. இன்றும் அதுதான் நடந்தது. அவர் என்னை மிகவும் முரட்டுத்தனமாக பேசினார். இப்படி திரு கம்பீர் அவர்கள் செய்யக்கூடாது.

இங்கே என் மீது எந்த தவறும் கிடையாது. விரைவில் அல்லது உங்களுக்கு பின்னர் இது குறித்து தெரியும். அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. என் மாநிலம் குடும்பம் என எல்லோரும் கஷ்டப்படும் அளவுக்கு பேசினார். அவர் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்.

உங்கள் சக வீரர்களை மதிக்க முடியவில்லை என்றால் நீங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி என்ன பயன்? தொலைக்காட்சி ஒளிபரப்பில் விராட் கோலி பற்றி கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. வேறு எதையாவதுதான் பேசுவார்.நான் இன்னும் விரிவாக சொல்ல விரும்பவில்லை.

நான் இதனால் மிகவும் புண்பட்டு இருக்கிறேன். மேலும் அவர் கூறிய விதம் மோசமானது. நான் எந்த ஒரு கெட்ட வார்த்தை, துஸ்பிரயோகத்தையோ செய்யவில்லை. அவர் எப்போதும் என்ன மாதிரி மோசமாக பேசுவாரோ அதையே பேசினார்!” என்று கூறியிருக்கிறார்!