வீடியோ; முதல் ரெண்டு பால் ரெண்டு சிக்ஸ் ; அலறவிட்ட தோனி; கடுப்பான கம்பீர்!

0
901
MSD

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்திற்கு ஐபிஎல் தொடரில் திரும்ப வந்திருக்கிறது!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னை அணி சொந்த மைதானத்திற்கு திரும்பி இருப்பதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஸ்டாண்டுகள் புதிதாக திறக்கப்பட்டு இன்று மைதானம் அதன் முழு கொள்ளளவை ரசிகர்களால் எட்டி அமர்க்களப்பட்டது. இந்தப் போட்டிக்கான டாசை இழந்தாலும் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்கள்.

அணி 200 ரன்களைக் கடந்து நல்ல நிலையில் இருந்த பொழுது கடைசி ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் பந்துவீச்சில் ஜடேஜா ஆட்டம் இழக்க மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் வந்தார். அவர் வர மாட்டாரா என்று நினைத்த அவரது ரசிகர்களுக்கு இது மேலும் உற்சாகத்தை ஊட்டியது.

மைதானத்திற்குள் நுழைந்த மகேந்திர சிங் தோனி ரசிகர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் எல்லையை கடக்கும் அளவுக்கு செய்யும் விதமாக தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் அபாரமாக இரண்டு சிக்ஸர்களை அடித்து தான் இன்னும் பழைய தல தோனிதான் என்பதை நிரூபித்தார். அவர் காட்டிய அந்த கெத்து மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க பல நேரம் பிடித்தது. லக்னோ அணிக்கு மென்டராக இருக்கும் கௌதம் கம்பீர் தனது அணி கடைசியிலும் ரண்களை வாரி வழங்க கடுப்பு ஆனார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி ஏழாவது வீரராக ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்தார்.

விராட் கோலி 224 ஆட்டங்கள் 6706 ரன்கள் 50 அரை சதங்கள்.
ஷிகர் தவான் 207 ஆட்டங்கள் 6284 ரன்கள் 49 அரை சதங்கள்.
டேவிட் வார்னர் 163 ஆட்டங்கள் 5937 ரன்கள் 60 அரை சதங்கள்.
ரோகித் சர்மா 228 ஆட்டங்கள் 5880 ரன்கள் 41 அரை சதங்கள்.
சுரேஷ் ரெய்னா 205 ஆட்டங்கள் 5528 ஆட்டங்கள் 43 அரை சதங்கள்.
மகேந்திர சிங் தோனி 236 ஆட்டங்கள் 5004 ரன்கள் 24 அரை சதங்கள்.