வீடியோ.. “இத செய் விக்கெட் வரும்”.. தோனியாக மாறி சொல்லி அடித்த கேஎல்.ராகுல்.. சொன்னதை செய்த குல்தீப்!

0
1215
ICT

இன்று ஆசியக் கோப்பையில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என்று முடிவு செய்தார். எதிர்பார்த்தது போலவே சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபட ஆரம்பித்தது.

- Advertisement -

இந்திய அணியின் மொத்த 10 விக்கெட்களும் இன்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினார்கள். பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் அசலங்கா நான்கு விக்கெட் கைப்பற்றும் அளவுக்கு இருந்தது.

இதன் காரணமாக இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் இன்று சர்துல் தாக்கூருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியின் மூன்று விக்கெட்டுகளை பவர் பிளேவில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அசலங்கா மற்றும் சதீரா இருவரும் இந்திய சுழற் பந்துவீச்சுக்கு எதிராக வித்தியாசமான திட்டங்களை உருவாக்கி விளையாட ஆரம்பித்தார்கள்.

அசலங்கா இந்திய சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் விளையாடினார். சதிரா இறங்கி வந்து பந்தை சுழல விடாமல் விளையாடினார். இதை இவர்கள் இருவரும் வியூகமாக செய்தனர்.

இந்த நிலையில் சதிரா இறங்கி வரும் பொழுது பந்தை நேராக குல்தீப் வீசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஓவருக்கு இடையில் அவரை கூப்பிட்ட கேஎல்.ராகுல் ” இறங்கி வந்து விளையாடும் பேட்ஸ்மேனுக்கு பந்தை நேராக வீச வேண்டாம் வெளியில் வீசு” என்று அறிவுரை கூறினார்.

இதன்படி அடுத்த ஓவர் வீச வந்த குல்தீப் யாதவ் கேஎல் ராகுல் சொன்னபடியே, சதிரா இறங்கி வருவதை யூகித்து பந்தை வெளியே வீச, சதிரா இறங்கி வந்து தவறவிட, கே எல் ராகுல் அருமையாக ஸ்டெம்பிங் செய்தார்.

சுழற் பந்துவீச்சாளர்களை விக்கெட் கீப்பராக இருந்து மகேந்திர சிங் தோனி மிக சிறப்பாக வழி நடத்துவார். கேஎல்.ராகுல் இன்று குல்தீப் யாதவை வழிநடத்திய விதம் மகேந்திர சிங் தோனியை ஞாபகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.