வீடியோ; பந்தை கோட்டை விட்ட தினேஷ் கார்த்திக் ; ஹெல்மெட்டை கழட்டி எறிந்து ஆவேசமாக கொண்டாடிய ஆவேஷ் கான்!

0
329
DK

கடந்த மூன்று நாட்களாக 16வது ஐபிஎல் சீசனில் மறக்க முடியாத போட்டிகளாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று பெங்களூரு லக்னோ அணிகள் பெங்களூரில் மோதிய போட்டியும் அமைந்திருக்கிறது!

இப்படி ஒரு திருப்பத்தை, இந்த ஐபிஎல் சீசனில் நேற்றுக்கு முன் நாள் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்துல் தாக்கூரை ஆடவிட்டு பெங்களூர் அணிதான் ஆரம்பித்து வைத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து குஜராத் அணிக்கு எதிராக ரிங்கு சிங் கடைசி ஐந்து பந்தில் ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் தனி ஒரு ஆளாக நின்று போராடி 99 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்.

இன்று மீண்டும் பெங்களூர் அணி லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது சொந்த மைதானத்தில் நிக்கோலஸ் பூரனை 19 பந்தில் 61 ரன்கள் எடுத்துவிட்டு, மீண்டும் ஒரு தோல்வியை வலிய வாங்கி இருக்கிறது.

இந்த போட்டியில் ஓவரின் கடைசிப்பந்தில் லக்னோ அணிக்கு ஒரு ரன் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்பொழுது அவர்கள் கைவசம் ஒரு விக்கெட்தான் இருந்தது. ரன் தராமல் இருந்திருந்தாலோ அல்லது விக்கெட்டை எடுத்து இருந்தாலும் போட்டி சூப்பர் ஓவருக்கு போயிருக்கும்.

- Advertisement -

கடைசி ஓவரின் கடைசி பந்தை வீச வந்த ஹர்சல் படேலுக்கு பந்துவீச்சு முனையில் ரவி பிஷ்னோயை ரன் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை தவறவிட்டார். இதற்கு அடுத்து மீண்டும் வந்து கடைசிப் பந்தை வீசிய பொழுது, பேட்டிங் முனையில் இருந்த ஆவேஷ் கான் அதை அடிக்க தவறி ரன் எடுக்க ஓடினார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தவறியதால், பந்துவீச்சாளர் முனையில் இருந்த ரவி பிஷ்னோய் எளிதாக கிரிசுக்குள் வந்து விட்டார். கடைசியில் இந்த சூப்பர் ஓவர் வாய்ப்பையும் பெங்களூர் அணி தவற விட்டு இறுதியில் தோற்றது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

நான்காவது போட்டியில் விளையாடிய லக்னோ அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். மூன்றாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். நாளை ஒரு வெற்றியும் பெறாத டெல்லியும் மும்பையும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன!