வீடியோ.. கோலி சதம் அடிக்க அம்பயர் உதவினாரா?.. உண்மையில் என்ன நடந்தது?.. மாஸ் காட்டிய கெட்டில்ப்ரோக்!

0
8456
Virat

நேற்று உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியில், இந்திய அணியின் ரன் மெசின் விராட் கோலி சதம் அடித்தார்.

விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது சர்வதேச 48வது சதமாகும். அவர் இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் மெகா உலகச் சாதனையை முறியடிப்பார்.

- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பையின் துவக்க போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தக் குறிப்பிட்ட போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பதற்கு நெருங்கி, ரன்களும் கைவசம் இருந்த நிலையில், துரதிஷ்டவசமாக 85 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார்.

இதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் சதம் அடிப்பதற்கான ரன்கள் எதிரணி அடிக்கவில்லை. இன்றைய நாளிலும் கூட அவர் சதம் அடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருந்தது.

- Advertisement -

விராட் கோலி என்பது ரன்களில் இருந்த பொழுது வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் இருந்து தான் அவர் 97 ரன்கள் எடுத்திருந்தபோது, சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி சதத்தை நெருங்கி நின்ற வேளையில், இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது பந்து வீசிய பங்களாதேஷ் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் நசும் அகமத் பந்தை வைடாக வீசினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கள நடுவர் கெட்டில்ப்ரோ அதற்கு வைட் கொடுக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனை சதம் அடிக்க விடாமல் செய்வதற்கு இதை ஒரு குறுக்கு வழியாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், நடுவர் அப்படியான ஒரு முடிவை எடுத்தார்.

பிறகு விராட் கோலி ஒரு ரன் எடுத்து முடித்து, மீண்டும் வந்து ஒரு சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். கள நடுவர் பந்துவீச்சாளர் குறுக்கு வழியில் செயல்படக்கூடாது என்பதற்காக வைட் தராமல் இருக்க, விராட் கோலிக்கு நடுவர் உதவி செய்ததாகவும் இதைச் சமூக வலைதளத்தில் சிலர் பேசி வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு 99 ரன்களில் இலங்கைக்கு எதிராக சேவாக் இருந்த பொழுது, வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், இலங்கை சுழற் பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீப் நோபால் வீசி சேவாக் சதத்தை குறுக்கு வழியில் தடுத்தார். தற்பொழுது அப்படி எதுவும் செய்ய முடியாமல்தான் நடுவர் தடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!