வீடியோ… “கடைசியில நீயுமா?” தோனி பிறந்தநாள் முடிந்து வித்தியாசமாக வெறுப்பை காட்டிய ஸ்ரீசாந்த்!

0
361
Dhoni

இந்த மாதம் ஏழாம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாள் வந்தது.

இதற்கு உலகெங்கும் உள்ள பிரபலங்கள் பலரும் இந்திய அணியில் அவர் தலைமையின் கீழ் விளையாடிய வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் குவித்து வந்தார்கள்.

- Advertisement -

மேலும் பிசிசிஐ அதிகாரிகளும், இந்திய அரசியல் வாதிகளும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவரது ரசிகர்கள் தாண்டி பொதுவான கிரிக்கெட் ரசிகர்களும் அன்றைய நாளில் அவருக்கு தெரிவித்த வாழ்த்துக்களால் சமூக வலைதளத்தில் பெரிய பதிவுகளின் நெரிசல் உண்டானது. இப்படி எல்லா பக்கத்தில் இருந்தும் அவருக்கான வாழ்த்துகள் குவிந்தன.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வித்தியாசமான ஒரு பிறந்தநாள் வாழ்த்தை மகேந்திர சிங் தோனிக்காக இன்ஸ்டாகிராமில் கொண்டு வந்திருக்கிறார். தற்பொழுது இது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் இரண்டு நாட்கள் கழித்து தாமதமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த அவர், தனது வாழ்த்தாக இன்ஸ்டாகிராம் பதிவில் 2009 ஆம் ஆண்டு தான் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு விளையாடிய பொழுது, இரண்டு ரன்கள் விளையாடிக் கொண்டிருந்த மகேந்திர சிங் தோனியை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றிய வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.

சம்பந்தமே இல்லாமல் அவருடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் கழித்து இப்படி ஒரு வீடியோவை, இந்திய முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஏன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தற்பொழுது இது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி வருகிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். பின்பு 2018 ஆம் ஆண்டு அவருக்கு அந்த வழக்கு விடுதலை அளிக்கப்பட்டது. மீண்டும் அந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 7 ஆண்டுகள் தடை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து கிரிக்கெட் விளையாட வந்த அவர் சிறிது காலத்தில் ஓய்வை அறிவித்துவிட்டு தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி மீது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் ஏதாவது ஒரு மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தி வருவது தற்காலத்தில் வழக்கமாகி வருகிறது. இது சமூக அந்த நேரத்தில் பெரிய சர்ச்சையாக மாறியும் விடுகிறது. அந்த வகையில் இதுவும் சர்ச்சையாகி இருக்கிறது!