வீடியோ.. மூடிய மைதானம்.. கூரையில் மாட்டிய பந்து.. சிக்ஸர் கொடுத்த நடுவர்.. ஆஸ்திரேலியாவில் நடந்த வினோதம்

0
1532

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பிக் பாஸ் லீக்கும் மிகப் பிரபலமாக உள்ளது. இத்தொடரின் 26வது போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மெல்போன் மற்றும் ஹோபார்ட் அணிகளுக்கு இடையேயான 26 ஆவது போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் பேட்டிங் களமிறங்கிய மெல்போன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சான் மார்ஸ் 0 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 20 ரன்களில் வெளியேற, பிறகு களம் இறங்கிய மெக் கூர்க் மற்றும் ஜாடன் காக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது.

- Advertisement -

காக்ஸ் 36 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு ஆட்டக்காரர் குக் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெல்ஸ் ஹோபர்ட் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார். இவர் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்தார். இறுதியில் மெல்போன் அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் குவித்தது.

ஹோபர்ட் அணித் தரப்பில் டிம் டேவிட், மெரிடித், நாதன் எல்லீஸ் மற்றும் நெகிழ் சவுத்ரி ஆகியோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் 148 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹோபர்ட் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிது பங்களிப்பினை அளித்தாலும் மிடில் வரிசையில் களமிறங்கிய ஷாம் மற்றும் சிஜே ஆண்டர்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஹோபர்ட் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஷாம் 36 பந்துகளில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்ஸர்களுடன் 51 ரன்களும், சிஜே ஆண்டர்சன் 35 பந்துகளில் 41 ரன்களும் குவித்து ஹோபார்ட் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இப்போட்டியின் இடையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது. போட்டியின் தொடக்கத்தில் மெல்போன் அணியின் டாம் ரோஜர்ஸ் வீசிய இரண்டாவது ஓவரை ஹோபர்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்டோர்மார்ட் எதிர்கொண்டார்.

- Advertisement -

இரண்டாவது ஓவரின் ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்த பிறகு டாம் ரோஜஸ் வீசிய லென்த் டெலிவரியை மெக்டோர்மார்ட் எதிர்கொண்டார். அவர் அடித்த சிக்சர் பேட்டின் மேல் விளிம்பில் பட்டு ஸ்டேடியத்தின் மேற்கூறையைத் தாக்கியது. ஆனால் பந்து கீழே வரவில்லை. ஆனால் பந்து ஸ்டாண்டில் விழுந்தது தெளிவாகத் தெரிந்தது. சமீபத்தில் பிக் பாஸ் லீகில் செய்யப்பட்ட மாற்றங்கள் சிக்ஸ் அடிக்கப்பட்ட பந்து கூரையைத் தாக்கினால் பந்து சென்ற திசையை பொறுத்து அது டெட்பாலா? அல்லது சிக்ஸரா? என்பதை இறுதி செய்ய நடுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆன்-பீல்ட் அம்பயர்களான எலோயிஸ் ஷெரிடன் மற்றும் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட் ஆகியோர் பந்து சென்ற திசையைப் பொறுத்து அது சிக்ஸர் என்று அறிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.