வீடியோ.. நூற்றாண்டின் சிறந்த பந்து.. ஆகாஷ் சோப்ரா வியப்பு.. ஷேன் வார்னே ஸ்டைலில் குவைத் கிரிக்கெட்டர் அசத்தல்

0
497
Akash

கிரிக்கெட்டில் பொதுவாக வேகப்பந்துவீச்சுக்கு என வேகத்தை பயன்படுத்தி வீசும் பொழுது ஒரு தனி கவர்ச்சி உண்டாகும். அது பந்தை ஸ்விங் செய்து கிடைக்கின்ற அனுபவத்தை விட தீவிரமாக இருக்கும்.

அதேபோல் சுழற் பந்துவீச்சில் பேட்ஸ்மேனை ஏமாற்றுகிற விதத்தில் குறிப்பிட்ட பந்து பல காலத்திற்கு ரசிகர்களால் நினைவு வைக்கப்பட்டு இருக்கும்.

- Advertisement -

இந்த வகையில் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழல் பந்தாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இடதுகை பேட்ஸ்மேன் ஆண்ட்ரூ ஸ்டாரசுக்கு சேன் வார்னே வீசிய ஒரு பந்து கூறப்படுகிறது.

இடதுகை பேட்ஸ்மேனுக்கு ஆப் சைடு வெளியே வீசி, அங்கிருந்து பந்து திரும்பி லெக் ஸ்டெம்பை தாக்கி இருக்கும். அந்த அளவிற்கு பந்து 90 டிகிரியில் திரும்பியது போல திரும்பியிருக்கும்.

இதேபோல் இன்னொரு சுழல் பந்துவீச்சு லெஜன்ட் முத்தையா முரளிதரன் தன்னுடைய மாயாஜால தூசுரா பந்துவீச்சின் மூலம் நம்ப முடியாத டெலிவரிகளை வீசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

லேக் ஸ்பின்னுக்கு மாயாஜால டெலிவரிகள் வீசுவது வார்னே என்றால், ஆப் ஸ்பின் மாயாஜால டெலிவரிகளுக்கு முத்தையா முரளிதரன்தான். இவர் தூஸ்ரா மட்டும் இல்லாமல், இயல்பான ஆப் பின்னிலும் பெரிய விருப்பத்தை பந்தில் உண்டாக்கக்கூடியவர்.

இப்படியான ஒரு மாயாஜால பந்தை குவைத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் பேசியிருக்கிறார். அவர் பந்து வீசுவதற்கு ஓடிவரும் ரன்அப் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

அப்படி வேடிக்கையாக ஓடிவரும் அவர் பந்தை நன்றாக தூக்கி காற்றில் ஆப் சைட் வெளியில் வீசுகிறார், பந்தை விளையாட முயற்சி செய்து ஆப்சைடு வரும் வலதுகை பேட்ஸ்மேன் நொடி நேரத்தில் ஏமாந்து போகிறார்.

ஏனென்றால் பந்து அங்கிருந்து 90 டிகிரியில் அப்படியே திரும்பி ஸ்டெம்பை தாக்குகிறது. இந்த வீடியோவை பார்த்த இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “பேட்ஸ்மேன் தயாராக இருக்கிறார். இது என்ன மாதிரியான பவுலிங் ஆக்சன்? பந்தை தூக்கி நன்றாக போடுகிறார். பெரிய டர்ன் ஆகிறது. நம்பவே முடியவில்லை இந்த பந்து இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து. முத்தையா முரளிதரனை விட அதிகமாக பந்து திரும்பி இருக்கிறது” என்று வியந்து கூறி இருக்கிறார்.