வீடியோ… பெங்களூர் மைதானம் முழுக்க மஞ்சள்தான் ; அலறவிடும் சிஎஸ்கே – கெவின் பீட்டர்சன் ஆச்சரியம்!

0
491
CSK

பதினாறாவது ஐபிஎல் சீசனின் 24-வது போட்டியில் மிக முக்கியமான இரண்டு அணிகளான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்பொழுது பெங்களூர் மைதானத்தில் மோதி வருகின்றன!

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றால் சமூக வலைகளத்தில் இந்த இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் கேலிகளும் கிண்டல்களும் கொடிகட்டி பறக்கும்.

- Advertisement -

தனிப்பட்ட முறையில் இந்த போட்டிகளுக்கு எனவே வீடியோக்கள் தயார் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவலாக பலரால் பகிரப்படும். இந்தப் போட்டிக்கான முக்கியத்துவம் இந்த லெவலில் இருப்பதால் மற்ற அணி ரசிகர்களும் இந்த போட்டியை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இந்த காரணத்தால் இந்த போட்டியை சுற்றி நிறைய பணம் புரளும்.

இன்று பெங்களூர் மைதானத்தில் போட்டி நடப்பதால் பெங்களூர் அணிகளின் ரசிகர்களே மைதானத்தை ஆக்கிரமிப்பார்கள் என்ற கருத்துதான் பொதுவாக இருந்தது. ஆனால் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 60% சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆன கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” பெங்களூர் மைதானம் முழுக்க மஞ்சள் நிறமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படி அதிக அளவில் சென்னை ரசிகர்கள் பெங்களூர் மைதானத்தில் குவிவதற்கு காரணம் பெங்களூர் மைதானம் சென்னைக்கு மிக அருகில் இருப்பதால்தான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் பெங்களூர் பந்துவீச்சாளர்களை வதைத்து சென்னை ரசிகர்களை தற்போது குஷிப்படுத்தி வருகிறார்கள்.