வீடியோ.. AUSvsPAK.. 46ரன் 5விக்கெட்.. தொடரும் பாபர் அசாம் பரிதாபம்.. கம்மின்ஸ் கலக்கல்!

0
199
Cummins

ஆஸ்திரேலியாவின் மெல்போன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தற்பொழுது விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு மார்னஸ் லபுஷன் 63, உஸ்மான் கவஜா 42, மிட்சல் மார்ஸ் 41, டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 96.5 ஓவர்களில், 318 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, மிர் ஹம்சா மற்றும் ஹசன் அலி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இளம் வேகப்பந்துவீச்சாளர் அமீர் ஜமால் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நாதன் லயன் பந்துவீச்சில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக், கேப்டன் ஷான் மசூத் இருவரும் மிகப் பொறுப்பாக விளையாடிய ரன்கள் சேர்த்தார்கள். இந்த ஜோடி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தானே பந்து வீசி அபாரமாக கேட்ச் பிடித்து அப்துல்லா ஷபிக்கை 62 ரன்களில் வெளியேற்றினார். 124 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்த பாகிஸ்தான், அதற்குப் பிறகு மேற்கொண்டு 46 ரன்கள் எடுப்பதற்குள், ஐந்து விக்கெட்டுகளை இழந்து, மொத்தமாக 170 ரன்களுக்கு ஆறு விக்கெட் என பரிதாப நிலைக்கு சென்றது.

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் ஏமாற்றினார். இன்று ஒரு டன் மட்டுமே எடுத்திருந்த அவர், கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவர் இன்னும் முழுமையாக 50 ரன்கள் அடிக்கவில்லை என்பது சோகம். ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் எல்லா ஆட்டத்திலும் தொடர்ச்சியாக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறார். பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடுகிறது!