வீடியோ.. 609 நாட்கள் கழித்து அஷ்வின் விக்கெட்.. வினோதமாக விழுந்த லபுசேன்!

0
5863
Ashwin

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

தற்பொழுது இந்தத் தொடருக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் நால்வர் முதல் 2 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. கேஎல்.ராகுல் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானம் சேஸ் செய்வதற்கு சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய போட்டியில் 609 நாட்கள் கழித்து இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்ற. மேலும் அவருடன் ருதுராஜ் இடம் பெற்று இருக்கிறார். சிராஜ் விளையாடவில்லை.

முகமது சமி தான் வீசிய முதல் ஓவரிலேயே மிட்சல் மார்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அதற்கு அடுத்து டேவிட் வார்னர் நிலைத்து நின்று அரை சதம் அடித்து ரவீந்திர ஜடேஜா பந்தில் வெளியேறினார். திரும்ப வந்த சாமி ஸ்டீவ் ஸ்மித்தை கிளீன் போல்ட் ஆக்கினார்.

- Advertisement -

இதற்கு நடுவில் கேஎல்.ராகுல் ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்ட காரணத்தினால் வாழ்வு பெற்ற மார்னஸ் லபுசேன் ஒரு பக்கத்தில் இன்னிங்ஸை கட்டமைத்து அணியை முன்னோக்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தனது இரண்டாவது ஸ்பெல்லுக்கு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்தமாக பத்து ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட் கைப்பற்றி 47 ரன்கள் மட்டும் கொடுத்து முடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட லபுசேன் முயற்சி செய்ய, பந்து அவருடைய பேட்டில் பட, அதைக் கேஎல்.ராகுல் தவறவிட்டார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு ஸ்டெம்பில் பட, லபுசேன் பரிதாபமாக ஸ்டெம்பிங் ஆனார். இதன் மூலம் 609 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல் விக்கெட் கிடைத்திருக்கிறது!