வீடியோ; டி20 லீக்கில் ஒரே ஓவரில் 46 ரன்கள் அடிக்கப்பட்ட ஆச்சரிய நிகழ்வு!

0
1209
T20i

கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 46 ரன்கள் அடிக்கப்பட்ட ஆச்சரிய நிகழ்வு கே சி சி பிரண்ட்ஸ் மொபைல் டி20 சாம்பியன்ஷிப் 2023 ட்ராஃபியில் நிகழ்ந்திருக்கிறது.

கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு அதிகபட்சமாக 36 ரன்கள் இரண்டு முறை அடிக்கப்பட்டு இருக்கிறது. தென்னாபிரிக்காவின் ஹெர்செல் கிப்ஸ் 2006 இல் நெதர்லாந்துக்கு எதிராகவும், 2021ல் அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்கோத்ரா பப்பு நியூ கினியா அணிக்கு எதிராகவும் அடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ட்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 35 ரன்கள் எடுத்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ரன்னும், 2021 இல் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இலங்கைக்கு எதிராக ஒரு ஓவரில் 36 ரன்னும் எடுத்து இருக்கிறார்கள்.

அதிகபட்சமாக ஒரு ஓவருக்கு 36 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்க தற்பொழுது குவைத்தில் நடந்த இந்த டி20 சாம்பியன்ஷிப் லீக்கில் ஒரு ஓவரில் 46 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அந்தக் குறிப்பிட்ட ஓவரின் முதல் பந்து நோபால் ஆக வீசப்பட்டு சிக்ஸருக்கு, போக, அடுத்த பந்தில் கீப்பர் விட்டு பைசாக நான்கு ரன்கள் வந்திருக்கிறது. இதற்கு அடுத்து தொடர்ந்து ஐந்து பந்துகளில் நேராக 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட, அந்த ஓவரில் 46 ரன்கள் வந்திருக்கிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுவதற்கான முக்கியக் காலகட்டமாக தற்காலகட்டம் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டின் வருகையும் அதன் வெற்றியும் பெரிய வணிகமாக மாறி இருக்கிறது. இதனால் தற்பொழுது கிரிக்கெட் உலகமயமாக்கல் ஆகி வருகிறது!