வீடியோ.. ஆமீர் ஓவரில் 6,6,6,2,4.. 26 பந்தில் 80 ரன் யூசுப் பதான் சூறாவளி பேட்டிங்!

0
11424
Yusuf pathan

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தோன்றிய டி20 கிரிக்கெட் வடிவம், கிரிக்கெட்டை வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைய வைத்ததோடு, கிரிக்கெட் நுழையாத நாடுகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்துச் சென்று இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தோன்றிய டி10 கிரிக்கெட் வடிவம் டி20 கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் சென்றதோடு இல்லாமல், எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் டி10 கிரிக்கெட் தொடர் ஐந்து அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று அணிகள் தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகள் ஜிம்பாப்வே அணிகள்.

இந்தத் தொடரில் நடந்த குவாலிபயர் போட்டியில் டர்பன் க்ளாண்டர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ் ஆகிய இரண்டு தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் ஜோபர்க் பஃபல்லோஸ் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

டர்பன் க்ளாண்டர்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ப்ளிட்சர் 39 (14), ஆசிப் அலி 32 (12), நிக் வெல்ச் 24 (9) ஆகியோர் அதிரடியாக ரன்கள் எடுக்க பத்து ஓவர்கள் முடிவில், டர்பன் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் அதிரடியாகச் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜோபர்க் பஃபல்லோஸ் அணிக்கு கேப்டன் முகமது ஹபீஸ் 17 (8), டாம் பாண்டன் 4 (4), வில் ஸ்மீத் 16 (9), ரவி போபரா 1 (2), முஷ்பிகுர் ரஹீம் 14* (10) என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

ஆனால் இன்னொரு முனையில் நங்கூரம் இட்டு நின்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் அதிரடியில் தற்போது விளையாடும் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். அவர் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாமே பவுண்டரி எல்லைக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன.

முடிவில் 9.5 ஓவர்களில் ஜோபர்க் பபல்லோஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற யூசுப் பதான் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் 26 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் வீசிய ஒரு ஓவரில் 6,6,6,2,4 என 26 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.