வீடியோ.. 6 பந்தில் 9 ரன் தேவை.. பவுலிங்கில் அசத்திய இர்பான் பதான்.. ரெய்னா அணி அமெரிக்காவில் அசத்தல்!

0
1866
Irfan

தற்பொழுது அமெரிக்காவில் 10 ஓவர்கள் கொண்ட யு எஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெற்று இருக்கின்றன. இதில் நான்கு அணிக்கு ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் கேப்டன்களாக இருக்கிறார்கள்.

நேற்று சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்து வரும் கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கும், உத்தப்பா கேப்டனாக இருக்கும் அட்லாண்டா ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி நடைபெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை அவருக்குப் பதிலாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கேப்டன் பொறுப்பை கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கு ஏற்று இருந்தார். அவர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கு பின்ச் இரண்டு ரண்களில் வெளியேறினார். மிலிந்த் குமார் 19 ரன்கள் எடுத்தார். ஜாக் காலிஸ் 27 பந்தில் 38 ரன்கள், ரிக்கார்டோ பவல் 18 பந்தில் 33 ரன்கள் என இருவரும் ஆட்டம் இழக்காமல் ரன்கள் எடுக்க, 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு கலிபோர்னியா நைட்ஸ் அணி 94 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய அட்லாண்டா ஸ்ட்ரக்கர்ஸ் அணிக்கு கேப்டன் ராபின் உத்தப்பா ஒன்பது பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இன்னொரு பக்கத்தில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லென்டிஸ் சிம்மன்ஸ் 21 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஒன்பதாவது ஓவரில் 16 ரன்கள் வந்தது. இதனால் அட்லாண்டா ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கட்டுகள் இருந்தது. களத்தில் அதிரடி வீரர் டிவைன் ஸ்மித் இருந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் வீச வந்தார். அவர் அந்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீசிவிட்டு, மீதி 6 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து, ஒரு ரன்அவுட் மற்றும் ஒரு விக்கெட் என இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி, தனது அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெறவைத்தார். இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசிய இர்ஃபான் பதான் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, மிகக் குறிப்பாக கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே தந்ததால், அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.