வீடியோ.. 6,6,6,6,6,6,6,4,4,4.. காட்டடி அடித்த கிறிஸ் ஜோர்டான்.. சிஎஸ்கே மும்பை ரசிகர்கள்தான் பாவம்!

0
1383
Jordan

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடருக்கு முன்னோடியாக இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என்ற தொடர் வெகு காலத்திற்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தும் விதமாக நூறு பந்து போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொடர் தி ஹண்ட்ரட் என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் சீசன் நடைபெற்றது. இந்த சீசனின் இந்தத் தொடரின் முதல் சாம்பியனாக மகில ஜெயவர்த்தன பயிற்சியாளராக இருந்த சதர்ன் பிரேவ் அணி வந்தது. தற்போது இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த நூறுபந்து தொடரில் சதர்ன் பிரேவ் அணியும் வெல்ஸ் ஃபயர் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெல்ஸ் ஃபயர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய வந்த சதர்ன் பிரேவ் அணியை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அதிர வைத்தார். அந்த அணி 54 ஆவது பந்தில் தனது 6வது விக்கட்டை 56 ரன்களுக்கு பறி கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் களம் இறங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி, தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் கிறிஸ் ஜோர்டான் ஒரு வித்தியாசமான இன்னிங்ஸை ஆடி காண்பித்து விட்டார். இறுதியில் சூறாவளி போல் சுழன்ற அவர் மொத்த ஆட்டத்தின் முடிவையும் தனியாளாக மாற்றி விட்டார்.

அவர் தான் சந்தித்த முதல் 14 பந்துகளில் எடுத்த ரன்கள் வெறும் எட்டு மட்டுமே. அதற்கு அடுத்து அவர் சந்தித்த 18 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். இதில் மொத்தம் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடக்கம். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். நூறு ரண்களை எட்டுவதற்கே தடுமாறிக் கொண்டிருந்த சதர்ன் பிரேவ் அணி நூறு பந்துகளின் முடிவில், எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதற்கான வீடியோ இணைப்பு கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்து விளையாடிய வெல்ஸ் ஃபயர் அணிக்கு வந்த பேட்ஸ்மேன்கள் சராசரியான ரன் பங்களிப்பை தந்தாலுமே, அவர்களால் இறுதியில் வெற்றியை எட்ட முடியாமல் போனது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசியாக அந்த அணியால் ஏழு விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் அமர்க்களமான ஆச்சரியமான ஒரு வெற்றியை சதர்ன் பிரேவ் அணி பெற்றது!