வீடியோ.. 6,6,6,6.. 72 ரன் 37 பந்து.. சூரியகுமார் யாதவ் அட்டகாசம்.. திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்!

0
5415
Surya

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இன்றைய போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 104 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 இருவரும் சதம் அடித்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன் பார்ட்னர்ஷிப் தந்து, வலிமையான அடித்தளத்தை அமைத்தார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு களத்திற்கு வந்த கேப்டன் கேஎல்.ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவருடன் சேர்ந்து விளையாடிய இஷான் கிஷான் 18 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு நடுவே சூரியகுமார் யாதவ் உள்ளே வந்தார்.

இவர் உள்ளே வந்த பொழுது ஆடம் ஜாம்பாவுக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருந்தது. அந்த இரண்டு ஓவர்களை மட்டும் மிகவும் பொறுமையாக சூரியகுமார் விளையாடி நகரத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 44ஆவது ஓவரை கேமரூன் கிரீன் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளை எதிர் கொண்ட சூரியகுமார் யாதவ் நான்கு திசைகளில் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 24 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சித்தர்களுடன் இந்த தொடரில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது அரைசதத்தை அதிரடியாக பதிவு செய்தார்.

கடைசிப் பத்து ஓவர்களில் தான் களத்தில் இருந்தால் என்ன செய்ய முடியும்? என்று, இன்று சூரியகுமார் யாதவ் தன் அணிக்கும் சேர்த்து காட்டி இருக்கிறார். அவர் பேட்டில் படும் பந்துகள் காற்றில் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்து கொண்டிருக்கிறன. இறுதிவரை களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அதிரடியாக சேர்த்திருக்கிறது!