வீடியோ.. “6, 6, 4.. மிரண்டு போயிட்டேன் நண்பா” – திலக் வர்மா அதிரடிக்கு குட்டி ஏபிடி வாழ்த்து!

0
1435
Tilakvarma

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது!

இந்த போட்டியில் இந்திய அணிக்கு திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அறிமுகமானார்கள். முதலில் இந்திய அணி பந்து வீச இறுதி கட்ட ஓவர்களில் முகேஷ் குமார் தன்னுடைய அற்புதமான துல்லிய யார்க்கர் பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டை கைப்பற்றாவிட்டாலும் கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் திலக் வர்மா ஒட்டுமொத்தமாக அனைவரது கவனத்தையும் எடுத்தார். உள்ளே வந்த முதல் பந்துக்கு மெதுவாக ஆடி, அடுத்து அல்சாரி ஜோசப் வீசிய ஓவரில் தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு, தான் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை காட்டினார்.

திலக் வர்மா பேட்டிங்கில் அதிரடி மட்டுமே காட்டாமல், புத்திசாலித்தனமாகவும் விளையாடக்கூடிய வீரர். நேற்று அல்சாரி ஜோசப் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட்டாலும், மூன்றாவது பந்து நல்ல முறையில் விழுந்து செல்ல, பொறுமையாக இருந்து அந்தப் பந்தை கீப்பரிடம் விட்டார். நேற்று இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் அவர் 39 ரன்கள் எடுத்த விதம் மிகவும் நம்பிக்கை கூறியதாக இருந்தது. ஆட்டம் இழந்த பந்தின் வேகத்தை தவறுதலாக கணித்துவிட்டார். இல்லையென்றால் அவரே ஆட்டத்தை முடித்து இருப்பார்.

தற்பொழுது இவருடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும், செல்லமாக குட்டி ஏ பி டி வில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரிவியஸ் திலக் வர்மா அடித்த இரண்டு சிக்ஸர்களுக்கு வியந்து வாழ்த்து செய்தியை வழங்கியிருக்கிறார். வீடியோ காலில் வந்து திலக் வர்மாவுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறார். திலக் வர்மா அடித்த சிக்சர்கள் மற்றும் டிவால்ட் பிரிவியஸ் வாழ்த்து செய்தி இரண்டுக்குமான வீடியோ இணைப்புகள் கடைசியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டிவால்ட் பிரிவியஸ் தனது பேச்சில்
“ஹேய் பிரதர்! நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களை விட உற்சாகமாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. நான் என் தரப்பில் இருந்தும் பிரவியஸ் குடும்பத்தின் தரப்பில் இருந்தும், உங்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பெற்றோர்களும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. உங்கள் கனவை நிறைவேற்றும் வகையில் உங்களை வெளியே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த இரண்டு சிக்ஸர்கள் எனக்கு கூஸ்பம்ப்மை தந்தது. இப்போதும் எப்போதும் என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொடரில் எஞ்சி இருக்கும் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட உங்களுக்கும் இந்திய அணிக்கும் எனது வாழ்த்துக்கள். நான் உங்களை முழுமையாக ஆதரிக்கிறேன். சியர்ஸ் பிரதர்!” என்று பேசியிருக்கிறார்!