வீடியோ.. 6,6,2,2,6,2,6,6.. ரிங்கு சிங் மாஸ் பினிஷிங்.. எதிரணியை மிரள விட்ட ஆட்டம்.. SMAT 2023!

0
923
Rinku

இந்தியாவில் ஒருபுறம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வந்து கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் இந்தியாவின் உள்நாட்டு மிகப் பெரிய டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது.

உலக கிரிக்கெட்டில் தற்போது டி20 கிரிக்கெட் வடிவத்தில் மிகப்பெரிய ஆதிக்கம் நிலவி வருகிறது. இந்த காரணத்தினால் ஒவ்வொரு நாடுகளுமே தனிப்பட்ட முறையில் டி20 தொடர்கள் நடத்துகின்றன.

- Advertisement -

இந்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய டி20 தொடர் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது. இது வணிக ரீதியாக உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்த தொடராக இருக்கிறது. எனவே இந்தியாவில் நடைபெறும் சையத் முஸ்டாக் அலி டி20 தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. காரணம் இதிலிருந்து ஐபிஎல் அணிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பல அணிகளின் தேர்வாளர்கள் இந்த தொடரை நேரில் வந்து பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்பொழுது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் காலிறுதியில் நான்கு போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் ஒரு போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் பஞ்சாப் அணியும் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்ற முடிந்து இருக்கிறது. இந்த போட்டியில் உத்தரப்பிரதேச மாநில அணிக்காக இந்திய டி20 வீரர் ரிங்கு சிங் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் விளையாடிய உத்திர பிரதேச அணி 50 ரன்கள் எட்டுவதற்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் சிக்கிக் கொண்டது. இந்த நேரத்தில் ஐந்தாவது வீரராக வந்த ரிங்கு சிங் வழக்கம்போல் தனது அனைத்து கௌரவமான ஒரு ஸ்கோரை கொண்டு வந்தார்.

இன்றைய போட்டியில் அவர் மொத்தமாக 33 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். இதில் கடைசி ஐந்து சிக்ஸர்களை கடைசி இரண்டு ஓவர்களில் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியில் நான்கு முறை இரண்டு ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த வகையில் மட்டும் கடைசி இரண்டு ஓவர்களில் 38 ரன்கள் கொண்டு வந்தார். இன்று அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 233!

பினிஷிங் ரோலில் தன்னை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிச்சயம் கண்டு கொள்ள வேண்டும் என்று இந்த பேட்டிங் மூலம் அவர் அறிவிப்பு செய்தது போல் இருந்தது. மேலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு உத்தர பிரதேச அணி 169 ரன்கள் எடுக்க, அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 19.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பஞ்சாப் தரப்பில் மும்பை இந்தியன் சனிக்காக விளையாடும் நெகில் வதேரா 52 ரன்கள் குவித்தார்.