வீடியோ; 64ரன்ஸ்.. 206 ஸ்ட்ரைக்ரேட்.. ஜாக் காலிஸ் 47 வயதில் அபாரம்.. ரெய்னா கேப்டன்சியில் USA-வில் அசத்தல்!

0
3117
Kallis

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆறு அணிகளைக் கொண்டு மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 தொடர் முதல்முறையாக நடத்தப்பட்டது.

இந்த முதல் சீசனில் குவாலிபயர் சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில், சீட்டில் ஆர்கஸ் அணியை வென்று முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று துவங்கி அமெரிக்காவில் யு.எஸ் மாஸ்டர்ஸ் டி10 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. மொத்தம் 25 போட்டிகள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. மேலும் ரவுண்ட் ராபின் முறையில் நடக்கிறது.

இந்தத் தொடரில் அட்லாண்டா ரைடர்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா, கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா, மோரிஸ்வில்லே யுனிவர்சிட்டி அணிக்கு ஹர்பஜன் சிங், நியூஜெர்சி ட்ரிடான்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர், நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கு மிஸ்பா உல் ஹக், டெக்சாஸ் சார்ஜர் அணிக்கு பென் டக் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று இந்தத் தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான கலிபோர்னியா நைட்ஸ் அணியும், பென் டக் தலைமையிலான டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணியும் மோதிய போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற கலிபோர்னியா நைட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அந்த அனைத்து துவக்க ஆட்டக்காரராக வந்த ஆரோன் பின்ச் ரன் எடுக்காமல் வெளியேறினார். ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த 47 வயதான காலிஸ் மற்றும் அமெரிக்காவுக்காக விளையாடி வரும் மிலிந்த் குமார் இருவரும் அதிரடியில் சூறாவளியாக சுழன்று அடித்தார்கள். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலிஸ் 31 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்தார். மிலிந்த் குமார் 28 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் கலிபோர்னியா நைட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது.

இதற்கு அடுத்து விளையாடிய டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணிக்கு யாரும் பெரிதாக ரன் எடுத்து தரவில்லை. முக்தார் அகமது 33, உபுல் தரங்கா 27 ரன்கள் எடுத்தார்கள். பத்து ஓவர் முடிவில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்து, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆஸ்லே நர்ஸ் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.