வீடியோ; 6, 6, 6, 6… ஆர்சிபி வீரரை விளாசி தள்ளிய பூம் பூம் அப்ரிடியின் மருமகன் ஷாகின் அப்ரிடி!

0
1012
Shaheen

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் டி20 பிளாஸ்ட் என்ற பெயரில் உள்நாட்டு டி20 லீக் ஒன்றை நடத்தி வருகிறது.

இந்த லீக் தற்பொழுது விட்டலிட்டி பிளாஸ்ட் என்ற பெயரில் நடந்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு இதன் முதல் எடிஷன் நடைபெற்றது.

- Advertisement -

இதில் இங்கிலாந்தின் 18 கவுண்டி அணிகள் பங்கு பெறுகின்றன. ஐபிஎல் தொடர் போலவே உள்ளே வெளியே என்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த டி20 தொடரில் நேற்று வொர்செஸ்டர்ஷிர் அணியும் நாட்டிங்காம்ஷிர் அணியும் மோதின. முதலில் விளையாடிய வொர்செஸ்டர்ஷிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

இந்த அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி நான்கு ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நாட்டிங்காம்ஷிர் அணிக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த வலதுகை சுழற் பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் வீச வந்தார்.

இந்த நேரத்தில் களத்தில் நின்ற ஷாகின் ஷா அப்ரிடி அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார். மொத்தம் 11 பந்துகளைச் சந்தித்த அவர் நான்கு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவர் ஆட்டம் இழந்த பிறகு அந்த அணியின் வெற்றி கனவு முடிவுக்கு வந்தது. அந்த அணி 170 ரன்களில் ஆட்டம் இழந்து தோல்வி அடைந்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக விளங்கிவரும் ஷாகின் ஷா அப்ரிடி, சமீபக்காலமாக பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடி வருகிறார் என்பது பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.