வீடியோ.. 53 பந்து.. 5 பவுண்டரி.. 10 மெகா சிக்ஸ்.. பூரன் ருத்ர தாண்டவம்.. CPL-ல்.. அதிரடி சதம்!

0
648
Pooran

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடரின் வெற்றி, உலகெங்கும் டி20 தொடர்களை நடத்துவதற்கு முக்கிய ஊக்க சக்தியாக இருந்து வந்திருக்கிறது!

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்தில் கரீபியன் பிரிமியர் லீக் என்ற பெயரில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நிறைய அதிரடி வீரர்கள் நிரம்பி இருக்கின்ற காரணத்தினால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே வெளியிலும் வரவேற்பு உண்டு.

- Advertisement -

இந்தத் தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் இரண்டும் அணிகளை வாங்கி உள்ளது. இன்று இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற பார்படோஸ் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரர் மார்க் டேயல் ஆறு ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் உடன் ஜோடி சேர்ந்தார். இதற்குப் பின் மைதானத்தில் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கால் ஆனால் பறக்க ஆரம்பித்தது.

- Advertisement -

அவர் சந்தித்த பந்துகள் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக பறந்தன. இறுதியில் 51 பந்தில் தனது அதிரடி சதத்தை நிறைவு செய்தார் நிக்கோலஸ் பூரன். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 102 ரன்கள் குவித்தார்.

மார்ட்டின் கப்தில் 37, ஆண்ட்ரே ரசல் 39 ரன்கள் இறுதி கட்டத்தில் எடுக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. பார்படோஸ் ராயல்ஸ் அணித் தரப்பில் ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கைய்ல் மேயர்ஸ் 45 பந்துகளில் அதிரடியாக 70 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இருபது ரன்களை தாண்டவில்லை. இருபது ரன்னை இரண்டு வீரர்கள் மட்டுமே எடுத்தார்கள்.

முடிவில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்!