வீடியோ; 20 ரன்னில் 5 விக்கெட்.. 11 பந்தில் 31 ரன் அடித்து வெற்றி பெற வைத்த no.9 பவுலர்.. மகாராஜா டிராபியில் ருசிகரம்!

0
1566
Sharath

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்த்து, உள்நாட்டில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெற்றிகரமாக நடத்தி வரும் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடர் போல, கர்நாடக கிரிக்கெட் வாரியம் மகாராஜா டி20 கிரிக்கெட் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது.

இந்த மகாராஜா t20 லீக் 2019 – 20ஆம் ஆண்டு முதல் முதலாக துவங்கப்பட்டது. தமிழ்நாடு பிரிமியர் லீக் போல் இல்லாமல் ஆறு அணிகளை கொண்டு மட்டுமே நடத்தப்படுகிறது. மற்ற எல்லா விதிமுறைகளும் ஐபிஎல் தொடர் போலவே பின்பற்றப்படுகின்றன.

- Advertisement -

மகாராஜா டி20 தொடரில் இன்றைய போட்டியில் குல்பர்கா மைஸ்டிக்ஸ் அணியும் சிவமோகா லயன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற சிவமோகா லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குல்பர்கா மை மைஸ்டிக்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஆதர்ஸ் பிரஜ்வால் 41 பந்தில் 43 ரன்களும், ஆர்.சமரன் 28 பந்தில் 40 ரன்களும், ஸ்ரீநிவாஸ் சரத் 11 பந்தில் 22 ரன்களும் எடுத்தார்கள். சிவமோகா லயன்ஸ் அணி தரப்பில் கிரந்தி குமார் நான்கு ஓவர்களுக்கு 17 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி விளையாடிய சிவமோகா லயன்ஸ் அணி 4.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டது. கடைசி 20 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் போனது. அந்த அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் சேர்ந்து எடுத்த ரன்கள் 26 மட்டுமே!

- Advertisement -

இந்த நிலையில் சிவமோகா லயன்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கோபால் உடன், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அந்த அணியை சரிவில் இருந்து மீட்கும் விதமாக விளையாடியது.

ஒரு முனையில் ஸ்ரேயாஸ் கோபால் வித்தியாசமாக அதிரடியில் ஈடுபட்டார். அதே சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக அபினவ் மனோகர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இறுதியாக ஸ்ரேயாஸ் கோபால் 37 பந்தில் 52 ரன்கள் எடுத்தும், அபினவ் மனோகர் 32 பந்தில் 28 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் சிவமோகா லயன்ஸ் அணிக்கு நெருக்கடி உருவானது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த எஸ்.சிவராஜ் மற்றும்சரத் இருவரும் சேர்ந்து அணியை 19.5 ஓவர்களில் இழக்க எட்ட வைத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். எஸ்.சிவராஜ் ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சரத் 11 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 31 ரன்கள் குவித்து ரன் அழுத்தத்தை துடைத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வந்து வீச்சில் ஒரு விக்கெட் மற்றும் பேட்டிங்கில் அரைசதம் அடித்த கேப்டன் ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!