வீடியோ.. 12 பந்தில் 4 விக்கெட்.. பாகிஸ்தான் வீரர்களை 40 வயதிலும் கலங்கடித்த ஸ்ரீசாந்த்!

0
8917
Srisanth

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது!

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 லீக் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் தொடர்களில் அணிகளை வாங்கி உள்ள இந்திய முதலாளிகள் வாங்கி இருந்தார்கள். முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த நிலையில் அந்தத் தொடர் முடிந்த சூட்டோடு தற்பொழுது அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆறு அணிகளில் நான்கு அணிகளுக்கு சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா ஆகிய நான்கு இந்திய வீரர்கள் கேப்டன்களாக இருக்கிறார்கள்.

நேற்று பென் டெக் கேப்டனாக இருக்கும் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிக்கும் ஹர்பஜன் சிங் கேப்டனாக இருக்கும் மோரிஸ்வில்லே யூனிட்டி அணிக்கும் இடையேயான போட்டியில் நடைபெற்றது. இதில் ஹர்பஜன் சிங் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணிக்கு டேரன் ஸ்டீவன்ஸ் 18 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 36 ரன்கள் எடுத்தார். பத்து ஓவர்கள் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் அணியில் இடம் பெற்று இருந்த 40 வயதான இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் சேர்த்தார். அவருடைய பந்து வீச்சின் தரம் சிறப்பாக இருந்தது.

அவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ், முக்தார் அகமத், உபுல் தரங்கா, டேரன் ஸ்டீவன்ஸ் என 12 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வெறும் 12 ரன்கள் கொடுத்து வீழ்த்தி அசத்தினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விளையாடிய ஹர்பஜன் சிங் தலைமை ஏற்று இருக்கும் மோரிஸ்வில்லே யூனிட்டி அணி 10 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் முகமது ஹபிஸ் சிறப்பாக செயல்பட்டு இரண்டு ஓவர்களுக்கு 10 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த, அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.