வீடியோ.. 3 சிக்ஸர் 2 பவுண்டரி 43 ரன்.. தீபக் சகர் ருதுராஜ் போலவே ஆடி அசத்தல்.. கலாய்த்த ருதுராஜ்!

0
5001
Deepak

உலகக் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் எப்பொழுதும் அரிதானவர்கள்; மதிப்புடையவர்கள். வேகப்பந்து வீச்சுத் துறையில் தற்போது முன்னேறி வரும் இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பவர் பொக்கிஷம் போல!

புதியப் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து, பேட்டிங்கும் செய்யக்கூடிய திறமை உடைய ஒரு வேகப்பந்துவீச்சாளர் கிடைப்பார் என்றால், எந்த அணியும் அப்படியான ஒரு வீரரை தவறவிட விரும்பவே விரும்பாது.

- Advertisement -

இப்படியான ஒரு வீரராகத்தான் இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடர் வழியாக தீபக் சகர் நுழைந்தார். ரைசிங் புனே ஜெயின்ட்ஸ் அணியில் தோனி தலைமையில் விளையாடிய இவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் அணி நிர்வாகம் கொண்டு வந்தது. பின்பு அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக ஏலத்தில் விட்டு, தற்போது 15 கோடிக்கு வாங்கி வைத்திருக்கிறார்.

அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக விளங்கும் அளவுக்கு திறமை கொண்ட இவருக்கு காயம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இவருடைய இடத்தில் சர்துல் தாக்கூர் இந்திய அணியில் இருந்து வருகிறார்.

தற்பொழுது ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு முதல் ஆறு அணிகளை கொண்டு ராஜஸ்தான் பிரிமியர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் பில்வாரா புல்ஸ் அணிக்கு தலைமையேற்று இருக்கும் தீபக் சகர், முதலில் பேட்டிங் செய்த தனது அணிக்கு, ஐந்தாவது வீரராக களத்திற்கு வந்து, 31 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரராக வந்து விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஒரு இன்சைட் அவுட் ஷாட் தனது ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரரான ருத்ராஜ் அடிப்பது போலவே இருந்தது.

ஆனாலும் இவரது பேட்டிங் சிறப்பாக இருந்த அதே வேளையில், இந்தப் போட்டியில் இவர் பந்து வீசவில்லை என்பது ஒரு கவலையான விஷயமாக இருக்கிறது. இந்தியா அணிக்கு பேட்டிங்கில் எட்டாவது இடம் பிரச்சனையாக இருந்து வருகிறது. குறைந்தபட்சம் அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்கும் டி20 தொடருக்காவது இவர் திரும்பி வருவது இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும்!

மேலும் இந்த போட்டியில் இவர் விளையாடிய வீடியோவை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இப்பொழுதுதான் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார். அதற்கு ருத்ராஜ் கேலியாக நிறைய டாட் பந்துகள் அதில் இருக்கிறது என்று திருப்பி பதில் அளித்து இருக்கிறார்.