வீடியோ.. ஜெய்ஸ்வாலுக்கு 3.. கில்லுக்கு 2.. 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பிய சோகம்!

0
210
Gill

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று தென் ஆப்பிரிக்காவில், இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பொதுவாக இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதை சாதகமான ஒன்று. ஆனால் இன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே தென் ஆப்பிரிக்கா நேராக பந்துவீச்சுக்கு சென்று விட்டது.

- Advertisement -

கடந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்த ருத்ராஜுக்கு தென் ஆப்பிரிக்காவில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருடைய இடத்தில் திரும்பி வந்த கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அது விமர்சனத்திற்கு ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் வந்தார்கள். இவர்கள் இருவருக்கும் தென் ஆப்பிரிக்க சூழ்நிலை மிக மிகப் புதிது. இதுவே இவர்களுக்கு முதல் சர்வதேச தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ஆகும்.

ஆட்டத்தின் முதல் ஓவரை மார்க்கோ யான்சன் வீசினார். தென் ஆப்ரிக்க ஆடுகளத்தில் இருக்கும் பவுன்சை ஜெய்ஸ்வால் கணிக்கவில்லை. இதன் காரணமாக வெளியில் வீசப்பட்ட ஒரு ஷார்ட் பந்தை கட் ஷாட் அடிக்க முயல, பாயிண்ட் திசையில் இருந்த டேவிட் மில்லர் சிறப்பாக கேட்ச் செய்தார். ரன் ஏதும் எடுக்காமல் ஜெய்ஸ்வால் 3 பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது ஓவரை லிசாட் வில்லியம் வீச வந்தார். இவருடைய ஓவரை சந்தித்த கில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்து ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். கடைசி ஆறு சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே கில் அடித்திருக்கிறார். மீதி ஐந்து போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித், ரகானே ரன்கள் எடுக்காமல் வெளியேறி இருந்தார்கள். ஏழு வருடத்திற்கு பின்பு மீண்டும் இதே சோகம் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறது