வீடியோ; கேட்ச் பிடிக்க சூழ்ந்த 3 ஃபீல்டர்ஸ்; கடைசியில் கேட்சை பவுலரே பிடித்த வினோதம்!

0
1736
Ipl2023

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது!

இரண்டாவது ஆட்டத்தில் தற்பொழுது குஜராத் ராஜஸ்தான் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதி வருகின்றன. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் முக்கியமான ஒன்று.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். ரன் சேசிங் செய்வதில் குஜராத் அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த முறை ஜேசன் ஹோல்டர் நீக்கப்பட்டு ட்ரெண்ட் போல்ட் உள்ளே வந்திருக்கிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின், சாகல், ஆடம் ஜாம்பா என மூன்று ரெகுலர் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.

ஆட்டத்தில் முதல் ஓவரை ட்ரண்ட் போல்ட் வீச இரண்டாவது பந்தை அட்டகாசமாக பவுண்டரிக்கு ஆடிய விருதிமான் சகா அடுத்த பந்தை ஃபிலிக் செய்ய போய் பந்து அவரது தலைக்கு மேல் நேராக காற்றில் எழும்பியது.

- Advertisement -

உள் வட்டத்தின் இரு புறத்திலும் நின்று இருந்த துருவ் ஜுரல், சிம்ரன் ஹெட்மையர் சகாவை நோக்கி பந்துக்கு வர, அதே சமயத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் பந்துக்கு வந்தார். பந்தை தனக்கு விடுமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் இருவரும் அதை கேட்கவில்லை.

இந்த நேரத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கிளவுஸில் பந்து பட்டு எகிறியது. இவர்களுக்கு சற்று தள்ளி நின்று நடப்பதை வேடிக்கை பார்த்த பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் அதைச் சாதாரணமாக பிடித்து சகாவை ஆட்டம் இழக்கச் செய்தார். இதைப் பார்க்கும் பொழுது “நகருங்கய்யா நானே பிடிச்சிக்கிறேன்!” என்பது போலவே இருந்தது. இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!