வீடியோ.. 4 ஓவருக்கு 3 கேட்ச் மிஸ்.. விராட் முதல் இஷான் வரை.. நேபாள் ஆசிய கோப்பையில் அதிரடி ஆரம்பம்.. இந்திய அணிக்கு புதுப்புது பிரச்சனை!

0
2088
ICT

இன்று மழை அச்சுறுத்தலுக்கு இடையே ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் விளையாடி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். மழை அச்சுறுத்தல் இருப்பதாலும், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் அணியுடன் சரியாக பேட்டிங் செய்யாத காரணத்தாலும், இந்த முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் இந்த போட்டியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக அணிக்குத் திரும்பி வந்த கேஎல்.ராகுலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி இருக்கும் பும்ராவுக்கு பதிலாக முகமது சமி இடம் பெற்றார்.

இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை முகமது சமி ஆரம்பித்தார். அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கவர் திசையில் நின்ற விராட் கோலிக்கு ஒரு எளிய கேட்ச் வந்தது. ஆனால் அதை யாரும் எதிர்ப்பாராத விதமாக விராட் கோலி தவறவிட்டார்.

இதற்கு அடுத்து முகமது சிராஜ் ஓவரில் வெளியில் வீசப்பட்ட பந்தை நேபாள் பேட்ஸ்மேன் கட் அடிக்க முயற்சி செய்ய, பந்து எட்ஜ் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரிடம் சென்றது. பந்தை சரியான டைமிங் செய்யாமல் ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார்.

- Advertisement -

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முகமது சமியின் ஓவரில் மீண்டும் வீசப்பட்ட ஒரு ஷாட் பந்தை நேபாள் பேட்ஸ்மேன் லெக்சைட் மடக்கி அடிக்க, பந்து கையுறையில் பட்டு, விக்கெட் கீப்பர் இஷான் கிசானுக்கு மிக எளிதாக ச் சென்றது. ஆனால் அவர் அதை அதிர்ச்சி அளிக்கும் விதமாக தவறவிட்டார்.

இந்த மூன்று வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்ட நேபாள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், இதற்கு அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கி விளையாட ஆரம்பித்தார்கள். பத்து ஓவர்கள் முடிவில் நேபாள அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 65 ரன்கள் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விக்கெட்டை சர்துல் தாகூர் இஷான் கிஷான் கேட்ச் மூலம் வீழ்த்தினார்.