வீடியோ.. ஒரே ஓவரில் 2 விக்கெட்.. பாகிஸ்தான் A அணியை கதி கலங்க வைத்த சிஎஸ்கே வீரர்

0
635

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடரில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

குரூப் ஏ பிரிவில் ஸ்ரீலங்கா ஏ பங்களாதேஷ் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் ஓமன் ஏ அணிகளும் குரூப் பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, யுஏஇ ஏ மற்றும் நேபாள் ஏ அணிகளும் பெற்றிருக்கின்றன. இதில் குரூப் ஏ-வில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும் குரூப் பி -யில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி குரூப்ல ஆட்டத்தில் எதிர் கொண்டு விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக டி20 மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆடிவரும் முகமது ஹாரிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணிக்கு கேப்டனாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று கொடுத்த யாஸ் துல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது . குறிப்பாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணிக்காக கடந்த இரண்டு சீசன்களில் ஆடிவரும் இளம் வீரரான ராஜ்வரதன் ஹங்க ரேக்கர் ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான சமி அய்யூப் விக்கெட்டையும் ஒன் டவுன் வீரரான உமர் யூசுப் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது . வேகப்பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதைப் போலவே சுழற் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுப்படுத்தினர் . இதனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ஆனாலும் பாகிஸ்தான் அணியின் காசிம் அக்ரம் சிறப்பாக விளையாடி அந்த அணியை ஆரம்பகட்ட சரிவிலிருந்து மீட்டார் . அவருக்கு உறுதுணையாக அந்த அணியின் முபாசிர் கான் மற்றும் மெக்ரான் மும்தாஜ் ஆகியோர் விளையாடினர். பாகிஸ்தான் அணி 206 ரன்களுக்கு ஆல் அவுட் அந்த அணியில் அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரண்களையும் ஷாயப்ஜாதா பர்கான் 38 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ராஜ்வரதன் ஹங்கரேக்கர்  42 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் மனாவ் சுதர் 36 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.