வீடியோ; 18 வயது.. 13 சிக்ஸர்.. 117 ரன்… 4 விக்கெட்… ருதுராஜ் கெய்க்வாட் அணியை வீழ்த்திய இளம் சிறுவன்!

0
33266
Mpl

தமிழ்நாட்டில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருவது போலவே மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இங்கு முன்னணி வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, ஷாருக்கான் ஆகியோர் பங்கேற்று விளையாடி வருவதைப் போலவே, அங்கு ருதுராஜ் மற்றும் ராகுல் திரிபாதி போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்று விளையாடுகிறார்கள்.

- Advertisement -

நேற்று ருதுராஜ் அணிக்கும் ராகுல் திரிபாதி அணிக்கும் இடையேயான போட்டி மகாராஷ்டிரா பிரீமியர் லீக் டி20 தொடரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராகுல் திரிபாதி அணிக்கு 18 வயதான வலது கை பேட்ஸ்மேன் அர்சின் குல்கர்னி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 46 பந்தில் சதத்தை எட்டினார். இது மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக பதிவானது. மொத்தம் 57 பந்துகளை சந்தித்த அவர் 117 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 13 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடக்கம்.
இவரது அதிரடியான ஆட்டத்தால் இவர்களது அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ருதுராஜ் அணிக்கு மிடில் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ருதுராஜ் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டி கடைசி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் என்ற நிலை உருவானது. இந்த நிலையில் சதம் அடித்த அர்சன் குல்கர்ணியே பந்துவீசி மூன்று ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் விளையாடுவதைப் பார்க்கையில் பெரிய வீரர்கள் விளையாடுவது போல அதிரடியாகவும் அனாயசமாகவும் இருக்கிறது. இப்படியான தொடர்கள் இளம் வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இவர் கூடிய விரைவில் ஐபிஎல் தொடரில் விளையாடலாம்.