வீடியோ: கடைசி ஒரு பந்தில் 18 ரன்… டிஎன்பிஎல் 2023-ல் நடந்த வினோத சம்பவம்… கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

0
32712
Tnpl2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் ஏழாவது சீசன் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியில் கோவை அணி வெற்றி பெற்றது.

நேற்று இரண்டாவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பேட்டிங் செய்யமுடிவு செய்தது.

- Advertisement -

சேப்பாக்கம் அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களாக நாராயணன் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் களமிறங்கினார்கள். இந்த ஜோடி 9.1 ஓவருக்கு 91 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நாராயணன் ஜெகதீசன் 27 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சேப்பாக்கம் அணியின் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அதிரடியாக மிகச் சிறப்பாக விளையாடி 55 பந்தில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 88 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் அணி ஐந்து விக்கட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய சேலம் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முடிவில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் அணி தனது முதல் வெற்றியை தனது முதல் ஆட்டத்தில் பதிவு செய்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி பேட்டிங் செய்யும்பொழுது இருபதாவது ஓவரை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் அபிஷேக் தன்வார் வீச வந்தார். அவர் முதல் ஐந்து பந்துகளில் ஒரு நோ-பால் உடன் எட்டு ரன்கள் கொடுத்தார்.

இதற்கு அடுத்து கடைசிப் பந்தை அவர் நோ-பாலாக வீசினார். மீண்டும் நோ-பால் வீசி சிக்ஸர் கொடுத்தார். இதற்கடுத்து மீண்டும் நோ-பால் வீசி இரண்டு ரன்கள் கொடுத்தார். இதற்கு அடுத்த பந்தை வைடாக வீசினார். மீண்டும் கடைசிப் பந்தை வீசிய அவர் அதில் சிக்ஸர் கொடுத்தார்.

கடைசி ஒரு பந்துக்காக மட்டும் அவர் ஐந்து பந்துகள் வீசினார். மேலும் அந்த ஒரு பந்துக்காக மட்டும் பதினெட்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் பதினோரு பந்துகள் வீசினார். அந்த ஓவரில் மொத்தமாக 26 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். உலக டி20 வரலாற்றில் ஒரு பந்துக்காக 18 ரன்கள் தந்தவர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.