வீடியோ.. 140 கிலோ வெ. இ வீரர் அடித்த 100.. 12 சிக்ஸ்.. 220 ரன்னை 18 ஓவரில் சேஸ்.. சிபிஎல் தொடரில் அட்டகாசம்!

0
1260
Cornwall

தற்போது வெஸ்ட் இண்டிஸ் தீவுக் கூட்டத்தில் 2013ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 தொடரான சிபிஎல் டி20 தொடர் நடந்து வருகிறது
இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெற்றிருக்கின்றன.

இந்தத் தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 2 அணி நிர்வாகங்களும் அணிகளை வாங்கி இருக்கின்றன.

- Advertisement -

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ள பார்படோஸ் ராயல்ஸ் அணியும், செயின் கிட்ஸ் நேவி பேட்ரியாட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து அதிரடியாக 220 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணியின் பிளக்சர் 56(37, வில் ஸ்மீட் 63(36), கூலி 22(16), கேப்டன் ரூதர்போர்ட் 65(25), கார்பின் பாஸ்க் 5(3), பென்னி ஹோவல் 1(1) ஆகியோர் குறிப்பிட்ட ரன்களை கொண்டு வந்தார்கள். பார்படோஸ் ராயல்ஸ் தரப்பில் கார்ன்வால் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

திருப்பி மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த கைய்ல் மேயர்ஸ் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஆனால் இன்னொரு முனையில் நிலைத்து நின்ற துவக்க ஆட்டக்காரர் ரஹீம் கார்ன்வால் செயின்ட் கிட்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து, மைதானத்தின் எல்லா பக்கத்திலும் பந்தைக் காற்றிலும் தரையிலும் பறக்கவிட்டு அசத்தினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் சதம் விளாசினார். 48 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் 102 ரன்கள் சேர்த்து மேற்கொண்டு காயத்தால் விளையாட முடியாமல் வெளியேறினார்.

இந்த நிலையில் களத்தில் நின்ற பார்போடோஸ் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் 26 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் சேர்த்து 18.1 ஓவரில் அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார். 220 ரன்கள் குறித்தும் செயின்ட் கிட்ஸ் அணியில் வெற்றி கனவை கார்ன்வால் சிதைத்து விட்டார்!