நாக்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழக அணிகள் மோதி விளையாடுகின்றன.
இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் விதர்பா அணியின் கருண் நாயர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து மீண்டும் தமிழக அணிக்கு தலைவலியாக நின்றிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டம் நாக்பூரில் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி விதர்பா அணியின் இன்னிங்சை அதர்வா டைட் மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் தொடங்கினார்கள். இதில் அதர்வா டைட் தனது பத்தாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் எம் முகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஆதித்யா தாக்கரே ஐந்து ரன்னில் சோனு யாதவின் பந்து வீச்சில் சாய் கிஷோரிடம் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு இடையில் த்ரூவ் ஷோரே 51 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கரின் பந்துவீச்சில் வெளியேறினார். 15 ஓவரில் 44 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய விதர்பா அணிக்கு தனிஷ் மலேவர் மற்றும் கருண் நாயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள்.
இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 188 பந்துகளில் 98 ரன்கள் குவித்தனர். இதில் மலேவர் 119 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரிகளுடன் 75 ரன் குவித்த நிலையில் விஜய் சங்கரின் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் கருண் நாயர் ஒரு முனையில் நிதானமாக பேட்டிங் ஆட மறு முனையில் யாஷ் ரத்தோடு 13 ரன், கேப்டன் அக்ஷய் வத்கர் 24 ரன்னில் வெளியேறினார். இடையில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் தமிழக அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சதம் அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க:54 ரன் 8 விக்கெட்.. 2வது மெகா வெற்றிக்கு அருகில் ஆஸி.. இலங்கை அணிக்கு சாதனை மைதானத்தில் சோகம்
180 பந்துகளை எதிர் கொண்டு 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 100 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். அவரோடு ஜோடி சேர்ந்திருக்கும் ஹர்ஷ் துபே 19 ரன்னில் நிற்க தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்து இருக்கிறது. எனவே அடுத்த நாளில் தமிழக அணிக்கு தலைவலியாக இருக்கும் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்த தமிழ்நாடு அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பந்துவீச்சை பொறுத்தவரை ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.