இந்திய கிரிக்கெட்

68 வருடம்.. 414 பந்து பார்ட்னர்ஷிப்.. ரஞ்சி பைனலில் கேரளாவுக்கு கருண் நாயர் தலைவலி.. முதல் நாள் முடிவு

தற்போது கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் விதர்பா அணி முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்று துவங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேரள அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் அசத்திய கேரளா

ரஞ்சி டிராபி விளையாட தகுதி பெற்று 68 வருடங்கள் கழித்து முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கேரளா அணி பந்துவீச்சில் ஆரம்பத்தில் அசத்தியது. விதர்பா அணி 24 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த டேனிஷ் மலேவர் மற்றும் கருண் நாயர் இருவரும் இணைந்து மிகப் பொறுமையாக விதி
ர்பா அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 100 ரன் தாண்டியது. மேலும் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தார்கள்.

- Advertisement -

414 பந்து பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேனிஷ் மலேவர் சதம் அடித்தார். இவருடன் சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய கருண் நாயர் 188 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 86 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறினார்.

இந்த ஜோடி பிரிந்தாலும் கூட மிக முக்கியமான சமயத்தில் ஜோடி சேர்ந்து 414 பந்துகளை சந்தித்து 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருக்கிறது. சிறப்பாக விளையாடிய டேனிஷ் மலேவர் 259 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 138 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இன்று முதல் நாள் முடிவுகளின் படி விதர்பா அணி வலிமையான நிலையில் இருக்கிறது.

இதையும் படிங்க : 1500 போட்டிகள்.. இந்தியா துபாயில் ஆடறதால ஜெயிக்கல.. நேர்மையா சொல்றேன் – பாக் கோச் பேச்சு

ரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் கேரள அணி 68 வருடங்களில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை இரண்டாவது நாளில் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வந்து, முதல்முறையாக ரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றுமா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by