“துணை கேப்டனுக்கு எந்த மதிப்புமே கிடையாது” – ஜடேஜா பற்றி இந்திய முன்னாள் வீரர் தாக்கு!

0
284
Jadeja

தற்பொழுது இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்கள் நடக்க இருக்கின்றன. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய இளம் வீரர்கள் கொண்ட அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து அந்த நாட்டில் டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்க இருக்கிறது. கடைசி போட்டியில் விளையாடிய வீரர்களில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்பது சுவாரசியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ருதுராஜ், ரவி பிஸ்னாய், தீபக் சகர் ஆகியோர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. இவர்கள் மூன்றாவது போட்டிக்கு திரும்பினால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயத்தில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக அணியில் இருந்து வருகிறார். ஆனால் அவர் ரன்கள் எடுக்கும் வேகம் குறைவாக இருக்கிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ரிங்கு சிங் இன்று மீண்டும் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் ஜித்தேஷ் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ரன்கள் எடுக்க வேண்டும். ஜடேஜாவுக்கும் அக்சருக்கும் இடையே போட்டி ஆரம்பமாகி இருக்கிறது. தற்பொழுது ஜடேஜா துணை கேப்டனாக இருந்தாலுமே பின்தங்கி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக இருந்தார். தற்போதைய காலகட்டத்தில் துணை கேப்டனுக்கு எந்த மதிப்புமே கிடையாது. இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரகானே துணை கேப்டனாக இருந்தார். ஆனால் அவர் தற்போது அணியிலேயே இல்லை.

இந்த நாட்களில் தேர்வாளர்கள் மிக உடனடியாக வீரர்களை கைவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக நீங்கள் யாராக இருந்தாலும் ரன்கள் எடுக்க வேண்டியது அவசியம். எனவே ஜடேஜா துணை கேப்டனாக இருந்தாலுமே ரன்கள் எடுத்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!